Bigg Boss: ஹல்வா கொடுத்த கானா வினோத்... கண்ணாடி மாட்டிவிட்ட விஜய் சேதுபதி
பிக்பாஸ் வீட்டிலிருந்து பணப்பெட்டியுடன் வெளியேறிய கானா வினோத்திற்கு விஜய் சேதுபதி கண்ணாடி அணிவித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளார்.
பிக்பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் கானா வினோத் பணப்பெட்டியுடன் வெளியேறினார்.
கானா வினோத் டைட்டில் வின்னராக வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரது இந்த முடிவை யாரும் எதிர்பார்க்கவில்லை.

18 லட்சத்துடன் வெளியேறியவரை பிக்பாஸ் தனது வார்த்தையினால் பெருமைபடுத்தினார். அத்தருணத்தில் ஒட்டுமொத்த வீடும் கண்ணீரில் மூழ்கியது.
இந்நிலையில் இன்று விஜய் சேதுபதியும் கானா வினோத்தை அழைத்து பெருமையாக பேசியுள்ளார். அனைவருக்கும் ஹல்வா கொடுத்துவிட்டேன் என்று கானா வினோத் கூறியதைக் கேட்ட விஜய் சேதுபதி அதை அவரே ஒத்துக் கொள்கிறார் பாருங்க என்று கூறினார்.
மேலும் கானா வினோத்திற்கு கண்ணாடியும் அணிவித்து மகிழ்ச்சியடைய வைத்துள்ளார். இக்காட்சியினை காண பார்வையாளர்கள் அதிக ஆர்வமுடன் இருக்கின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |