எல்லா விஷயத்திலும் அவர் அப்படித்தான் - சங்கீதா பற்றி விஜய் அம்மா சொன்ன தகவல்
விஜய்யிடம் இருந்து விவாகரத்து கேட்டு சங்கீதா நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.

விஜய் சங்கீதா விவாகரத்து
நடிகர் விஜய்க்கு எதிராக அவரது மனைவி சங்கீதா விவாகரத்து கேட்ட செய்தி சமீப காலமாக சமூக வலைத்தள பக்கத்தில் பெரும் வரைலாகி வருகின்றது.
நடிகர் விஜய்யும் சங்கீதாவும் 1999 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு சாஷா என்ற மகளும் சஞ்சய் என்ற மகனும் உள்ளனர்.
இவர்களின் குடும்ப வாழ்க்கை மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று கருதப்பட்ட நிலையில் கடந்த மாதம் 27ம் திகதி விஜய் வேறொரு நடிகையுடன் தொடர்புள்ளதால் அவரிடம் இருந்து விவாகரத்து வேண்டும் என குடும்ப நல கோர்டில் விஜய் மனைவி சங்கீதா மனு தாக்கல் செய்யது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்தது.

இந்த மனுவானது ஏப்ரல் 20ஆம் தேதி செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த நிலையில் இருவரும் பிரிந்து வாழும் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் இருவருக்கும் இடையே சமாதானம் என்கிற பேச்சுக்கு இடமில்லை என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையே விஜய்யின் மகன் சஞ்சய் படம் ஒன்றை இயக்கி அதில் பிஸியாகி வருகிறார். இருந்தும் நடிகர் விஜய்யுடன் எந்தவிதமான பேச்சுவார்தையும் இல்லாமல் பிரிந்து இருக்கிறார் என தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற விஜய்யின் தாயார் ஷோபா சங்கீதா குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு கூறிய விடயங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
ஷோபா பேசியதாவது “நானாக எதுவும் எனது விருப்பப்படி சமைக்க மாட்டேன். சங்கீதாவிடம் என்ன சாப்பாடு வேண்டும் என்று கேட்டு சமைத்துக் கொடுப்பேன்.
அது பற்றி நான் சங்கீதாவுக்கு போன் செய்து கேட்டால் அவர் "நான் பசங்களிடம் கேட்டு சொல்கிறேன்" என்பார். பின்னர் சஞ்சயிடமும் சாஷாவிடமும் "அத்தை வீட்டுக்கு போகப் போகிறோம், என்ன வேண்டும்?" என கேட்டு

அதற்கு சஞ்சய்யும் சாஷாவும் தங்களுக்கு பிரியாணி வேண்டும் என்பார்கள். நானும் அவர்களுக்காக பிரியாணி செய்து வைப்பேன். அவர்கள் வீட்டுக்கு வந்து திருப்தியாக சாப்பிடுவார்கள்.
இருவரும் நன்றாக எஞ்சாய் பண்ணி சாப்பிடுவார்கள். அதுவும் சஞ்சய் தான் "பிரியாணி நன்றாக இருக்கிறது" என்று சொல்லிக் கொண்டே சாப்பிடுவார்.
எல்லா விஷயத்திலும் சங்கீதா அப்படித்தான் என்று கூறியுள்ளார். குழந்தைகளை அவர் பார்த்துக்கொள்வது போல யாராலும் பார்த்துக்கொள்ள முடியாது. பக்கா கௌஸ் வைஃப் அவர் என கூறி உள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |