நடிகர் விஜய்யின் அம்மா காதலில் விழுந்தது எப்படி? இந்த கதை தெரியுமா உங்களுக்கு?
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் இளையதளபதி விஜய், சினிமாவில் நடிக்கத் தொடங்கிய நாட்களில் இருந்து தன்னைத்தானே மெருகேற்றி ஹிட் நாயகனாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இவரது ஒவ்வொரு பட வெளியீட்டையும், ஏன் பாடல்களை கூட ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.
இவரது தந்தை எஸ்ஏ சந்திரசேகர், தாய் ஷோபா சந்திரசேகர், பிரபல இயக்குனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்றே.
ஆனால் இவர்களது திருமணம் காதல் திருமணம் என்று உங்களுக்கு தெரியுமா?
காதல் வளர்ந்த கதை
எஸ்ஏ சந்திரசேகர் அவர்கள் சினிமாவில் வாய்ப்பு தேடி அலைந்த போது ஷோபாவின் வீட்டில் Paying Guestஆக தங்கியிருக்கிறார்.
இவரது நடவடிக்கைகள் ஷோபாவின் தந்தை உட்பட அனைவருக்கும் பிடித்துப் போனதாம்.
எனவே எத்தனை நாட்கள் வேண்டுமானாலும் தங்கிக்கொள்ளலாம் என கூறிவிட்டார்களாம்.
எஸ்ஏசி அவர்களுக்கும் ஷோபாவை பிடித்துப்போக, 5 ஆண்டுகளாக வெளியே சொல்லாமல் இருந்துள்ளார்.
ஒருகட்டத்தில் ஷோபாவின் தாயார், நல்ல பையனா இருக்காரே, இவரை திருமணம் செய்து கொள், உன் வாழ்க்கை நன்றாக இருக்கும் என ஷோபாவிடம் கூறியுள்ளார்.
இதன்பின்னரே எஸ்ஏசி மீது காதல் வயப்பட்டுள்ளார் ஷோபா, அதன்பின் திருமணம் முடிந்து சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
எப்போதுமே என் காதலி
தன்னுடைய மனைவியான ஷோபா பற்றி பேசிய எஸ்ஏசி, இவள் என் மனைவி என்பதை விட இன்று வரை என்னுடயை காதலி.
என் மகன் விஜய் மற்றும் மகள் வித்யாவுக்கு நல்ல அம்மா, நான் பலமுறை கோபப்பட்டு அடித்துள்ளேன்.
அடுத்தநாளே மன்னிப்பு கேட்டு சேர்ந்துவிடுவேன், அனைத்தையும் பொறுத்துக்கொண்டு என்னுடன் வாழ்ந்து வருகிறாள்.
அந்தளவுக்கு எங்களுக்குள் புரிதல் இருக்கிறது, அவள் இல்லையென்றால் நான் இல்லை, அவள் மீதான் என் காதல் குறையவுமில்லை, அவள் தான் எனக்கு எல்லாமே என காதல் மனைவி பற்றி நெகிழ்ந்துள்ளார் எஸ்ஏ சந்திரசேகர்.