நிர்வாகிகளை சந்திக்க விஜய் நெளிந்த காரில் வந்தது ஏன்? பின்னணியில் அம்பலமாகிய அதிர்ஷ்டம்
நடிகர் விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க அவர் வந்திருந்த கார் நெளிந்து காணப்பட்டுள்ளது தற்போது பேச்சு பொருளாக இருந்து வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சமீப நாட்களாக செய்யும் செயல்கள் அனைத்தும் மக்களை குஷிப்படுத்தி வருகின்றது.
ஆம் இந்த ஆண்டு 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகை வழங்கி கௌரப்படுத்தினார்.
கடந்த 17ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 12 மணிநேரத்திற்கும் மேலாக ஒரே இடத்தில் நின்று மாணவர்களை மகிழ்வித்த விஜய்யின் குணம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது.
இந்நிலையில் ஒவ்வொரு தொகுதியில் இருக்கும் தளபதி மக்கள் இயக்க நிர்வாகிகளை சந்திக்க முடியு செய்து நேற்று மதியம் பனையூர் தலைமை அலுவலகத்திற்கு வந்துள்ளார்.
இது அரசியல் குறித்து பேசுவதற்காக என்றும், மேலும் இவர் வந்த கார் நெளிந்து பழைய காராக இருந்ததால், ஏன் இந்த காரில் வந்தார் என்று பரபரப்பாக மக்களிடையே கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கான விடை என்னவெனில், ஏழு ஆண்டுகள் பழமையான காராக இருந்தாலும் இது விஜய்யின் அதிர்ஷ்ட கார் என்பது தெரியவந்துள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW