பொறுக்கித்தனமான பாடல்.... சிகரெட்டை ப்ரொமோஷன் செய்ய எத்தனை கோடி வாங்கினார் விஜய்?
விஜய் பாடிய நா ரெடி பாடல் வரிகள் மோசமாக இருப்பதால் தடை விதிக்க வேண்டும் என்றும், விஜய்யை பொறுக்கி என்றும் அனைத்து மக்கள் அரசியல் கட்சித் தலைவர் ராஜேஸ்வரி பிரியா குற்றம் சாட்டியுள்ளார்.
விஜய்யின் லியோ
நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள படம் தான் லியோ. இப்படத்தில் விஜய் பாடிய பாடலான நா ரெடி பாடலை விஜய்யின் பிறந்தநாள் அன்று படக்குழுவினர் வெளியிட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தனர். இப்
இந்நிலையில் அனைத்து மக்கள் அரசியல் கட்சித்தலைவரான ராஜேஸ்வரி பிரியா, இப்பாடலுக்கு தடை விதிக்க வேண்டும் என்றும், பாடல் முழுவதும் மது, புகைப்பிடித்தல் பற்றியும் கூறப்பட்டுள்ளது.
“புகைப்பிடித்தால் உங்களுக்கு பவர் கிடைக்குதுனு சொல்றாங்க... மில்லி உள்ள போன கில்லி வெளிய வரும்.... எனக்கு பாட்டில்ல பத்தாது அண்டாவுல கொண்டுவந்து குடுனு சொன்னா.... என்று பாடல் வரிகள் காணப்படுகின்றது.
விஜய்க்கு சிறுவயது ரசிகர்களும் இருப்பதாலும், சமூகத்தின் மீது அக்கறை இல்லாமல் இப்படியா கீழ்தரமான வரிகளை பாடுவதற்கு அவருக்கு எப்படி மனது வந்தது? என்று கேட்கின்றனர்.
நடிகர் விஜய் ஏற்கனவே சிகரெட் வாயில் வைத்துக்கொண்டு நடிக்கமாட்டேன் என்று கூறிய நிலையில், தற்போது இவ்வாறே நடித்துள்ளதுடன், இப்பாடல் மூலம் இளைஞர், பள்ளி மாணவர் வீணாக போனால் விஜய் பொறுப்பேற்பாரா என்ற கேள்வியையும் முன் வைத்துள்ளார்.
மாணவர்களை விருது கொடுக்க சந்தித்த மேடையில் இந்த பாடலை உங்களால் பதிவிட முடியுமா? தான் வழக்கு தொடர உள்ளதாகவும், குறித்த பாடலை படத்திலிருந்து நீக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இத்துடன் முடிக்காமல், பொறுக்கித்தனமான பாட்டு, இதெல்லாம் ஒரு பாடலா? என்ன பாடுறோம்னு தெரியாமல் மண்ணாங்கட்டிக்கு பொதுநலம் குறித்து மாணவர்களுக்கு விருது கொடுத்தீர்கள்... சிகரெட்டை புரமோஷன் செய்ய எத்தனை கோடி விஜய் வாங்கினார்னு இளைஞர்களுக்கு தெரியுமா? என்று ஆவேசமாக பேசியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |