‘மார்க் ஆண்டனி’ படத்திற்காக விஜய்யை நேரில் சந்தித்தார் விஷால் - வைரலாகும் புகைப்படம்!
நடிகர் விஷால் இயக்க இருக்கும் ‘மார்க் ஆண்டனி’படத்திற்காக நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ்சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 11ம் தேதி ‘வாரிசு’ திரைப்படம் தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றதுடன், வசூலில் சாதனை படைத்துள்ளது.
இதனையடுத்து தற்போது விஜய் ‘லியோ’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக த்ரிஷா, கௌதம் வாசு தேவ் மேனன், அர்ஜூன், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பல முன்னனி நடிகர்கள் நடித்து வருகிறார்கள்.
விஜய்யை நேரில் சந்தித்த விஷால்
இன்று நடிகர் விஜய்யை நேரில் சந்தித்துள்ள நடிகர் விஷாலின் புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது.
நடிகர் விஷால் சமீபத்தில் ஊடகத்திற்கு பேட்டி ஒன்றை கொடுத்தார். அதில், நடிகர் விஜய்யை வைத்து படம் எடுக்கப்போவதாக தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், இன்று நான் இயக்க இருக்கும் ‘மார்க் ஆண்டனி’படத்திற்காக நடிகர் விஜய்யை தன் படக்குழுவினருடன் நேரில் சந்தித்து பேசினார் நடிகர் விஷால். நடிகர் விஜய்யை பார்த்தவுடன் கட்டியணைத்து மரியாதை செலுத்தினார். பிறகு படக்குழுவினர் நடிகர் விஜய்க்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்து லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
Thalapathy Vijay watched #MarkAntony teaser & wishes Mark Antony team ??
— Karthik Ravivarma (@Karthikravivarm) April 27, 2023
Teaser releasing 6.30pm Today pic.twitter.com/67yuEi4klI
"Always proud to be your fan" ! ❤️?#ThalapathyVijayForMarkAntony https://t.co/dLCyvOkz7T pic.twitter.com/0im08zKSZ5
— ✰VᎥjสy✰ᴸᵉᵒツ (@iTz_Vijay_45) April 27, 2023
Though I'm an Ajith fan, #ThalapathyVijay immediately agreed to watch my #MarkAntony teaser and support my work. I'm extremely happy he is releasing the teaser. He is a real hero.
— George (@VijayIsMyLife) April 27, 2023
- Adhik Ravichandran pic.twitter.com/prwQmU8uwP