100 கோடி கொடுத்தாலும் அந்த கதாப்பாத்திரம் மட்டும் வேண்டாம்... மறுத்த விஜய் பட நடிகை
பிரபல நடிகை அமிஷா படேல் 100 கோடி ரூபாய் கொடுத்தாலும் மாமியார் கதாப்பாத்திரத்தில் நடிக்க முடியாது என கூறியிருக்கும் விடயம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நடிகை அமிஷா படேல்
ஹிந்தி சினிமாவில் பல டாப் ஹீரோக்கள் படத்தில் நடித்தவர் தான் நடிகை அமிஷா படேல். இவர் 2003 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டாம் ஹீரோயினாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார்.
இப்படத்தை அடுத்து இவர் தமிழில் எந்த படத்திலும் நடிக்கவில்லை. ஆனால் ஹிந்தியில் பிரபலமாக திகழ்கின்றார்.
தற்போது 49 வயதாகவும் அவர் கடந்த வருடம் Gadar 2 படத்தில் நடித்து இருந்தார். இந்த திரைப்படம் பெரிய ஹிட் அடித்ததுடன் 600 கோடிக்கும் மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
இந்நிலையில் அமீஷா படேல் மாமியார் ரோலில் நடிக்க மறுத்துவிட்டார் என Gadar 2 இயக்குனர் பேட்டியொன்றில் தெரிவித்திருந்தார்.
அதற்கு பதில் கொடுத்த அமீஷா படேல்,Gadar மட்டுமில்லை, வேறு எந்த படத்திலும் 100 கோடி சம்பளம் கொடுத்தாலும் மாமியார் கதாப்பாத்திரைத்தில் நடிக்க மாட்டேன் என குறிப்பிட்டுள்ளார்.
Dear @Anilsharma_dir dear anilji . This is only a film and not a reality of some family 🙏🏻😀🩷so on screen I do have a say as to what I want to do and not do 🙏🏻🩷respect u loads but will never play a mother in-law for gadar or any film even if paid 100 crores 🙏🏻🩷 pic.twitter.com/3ICZvU9I9c
— ameesha patel (@ameesha_patel) December 20, 2024
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |