இதுதான் சார் எங்க தளபதி! விஜய் செய்த உதவியை கொண்டாடும் ரசிகர்கள்
2023ம் ஆண்டு பொங்கலுக்கு விருந்து படைக்க வருகிறது நடிகர் விஜய்யின் வாரிசு.
பொங்கல் விருந்து
இந்த படத்தில் முதன்முறையாக விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார்.
இவர்களுடன் குஷ்பு, சரத்குமார், பிரபு, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த், ஷாம், கணேஷ் வெங்கட்ராம் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நேற்று நடைபெற்றது.
இதில் செம மாஸாக வந்த விஜய் குட்டி கதை சொல்லி ரசிகர்களை மேலும் குஷிப்படுத்தினார்.
அந்த மனசு தான் சார் கடவுள்
இந்நிகழ்வில் நடிகர் விஜய் பாடகி மானசிக்கு உதவி செய்த வீடியோ வைரலாகி வருகிறது.
அதாவது, ரஞ்சிதமே பாடலின் அனுபவம் குறித்து மானசி பேச முயன்றபோது அவரது மைக் சரியாக வேலை செய்யவில்லை.
அப்போது மானசி என்ன செய்வதென்று தெரியாமல் நிற்க, மேடையேறிய விஜய் மைக் கொடுத்து உதவினார்.
விஜய்யின் இந்த செயலை வீடியோவாக எடுத்து வெளியிட ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
— ???? ??????? (@Namakkl_OTFC) December 24, 2022