தளபதி விஜய் மனைவி சங்கீதாவிற்கு கொடுத்த காதலர் தின பரிசு... வைரலாகும் காணொளி!
தளாதி விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தன்று வாட்ச் ஒன்றை பரிசாக வழங்கியுள்ளார். பல ஆண்டுகளுகு முன்னர் வெளியான இந்த காணொளி இந்த காதலர் தினத்தின் பின்னர் இணையத்தில் வைரலாகி வரகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் வசூல் மன்னனாக இருக்கும் தளபதி விஜய், ஜனநாயகன் படத்துடன் சினிமாவிலிருந்து விலகுகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. அரசியலில் ஈடுப்பட போவதன் காரணமான சில மாதங்களுக்கு முன்னரே விஜய் அதனை உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தார்.
ஜனநாயகன் படத்துக்காக விஜய் 275 கோடி சம்பளம் வாங்கியுள்ளார் என தகவல்கள் இணையத்தில் உலா வருகின்றது. ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என தெரியவில்லை.ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் , நடிகர் விஜய் மனைவி சங்கீதாவை விவாகரத்து செய்ததாக வதந்தி காட்டுத் தீ போல் பரவியது.
இதற்கிடையில், கீர்த்தி சுரேஷ் உடன் நடிகர் விஜய் நெருக்கம் காட்டி வருவதாகவும், லியோவில் த்ரிஷாவுடன் நெருக்கம், டேட்டிங் என்றெல்லாம் பல சர்ச்சை கருத்துக்கள் வெளிவந்த நிலையில் அது குறித்து விஜய் எந்தவித கருத்தையும் வெளியிடவில்லை.
கடந்த 14 திகதி காதலர் தினம் கொண்டிய பல சினிமா பிரபலங்கள் சீரியல் பிரபலங்கள் தங்களின் வாழ்க்கை துணையுடன் எடுத்துக்கொண்ட ரொமான்டிக் புகைப்படங்களையும் வெளியிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் தனது மனைவி சங்கீதாவிற்கு காதலர் தினத்தன்று பரிசு வழங்கிய பல ஆண்டுகளுக்கு முன் எடுத்த காணொளியொன்று தற்போது இணையத்தில் ரசிகர்கள் மத்தியில் அசுர வேகத்தில் பகிரப்பட்டு வருகின்றது.
Blessing your Timeline a rare clips of THALAPATHY and Sangeetha ma'am ❤️😍@actorvijay pic.twitter.com/XoZWX5Ci1r
— Vijay Team Online (@VijayTeamOnline) February 16, 2025
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |