ரகசிய சினேகிதனே... என்றுமே காதல் வெல்லும்! திரிஷா பதிவு வைரல்
விஜய் சங்கீதாவின் விவாகரத்து சர்ச்சை தற்போது இணையத்தில் புயலை கிளப்பிவரும் நிலையில், நடிகை திரிஷாவின் காதல் பற்றிய பதிவுகள் அனைத்தும் இணையத்தில் காட்டுத்தீயாய் பரவி வருகின்றது.
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ளார். குறித்த நடிகை த்ரிஷா தான் என்ற கருத்து நெட்டிசன்கள் மத்தியில் காணப்படுகின்றது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் திரிஷா. இன்றும் அதே இளமையுடன் கதாநாயகி என்ற இடம்தை தக்கவைத்து வருகின்றார். திரையில் விஜய் மற்றும் த்ரிஷா இருவரின் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனதால் கடந்த 20 ஆண்டுகளில் 5 படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர். அதில் கில்லி, திருப்பாச்சி, லியோ போன்ற திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தன.

இவர்கள் இணைந்த நடித்த படங்கள் எந்த அளவுக்கு மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றதோ, அதே அளவுக்கு தற்போது சர்ச்சைகளையும் எதிர்கொண்டு வருகின்றது. சில ஆண்டுகளுக்கு முன் விஜய்யும் திரிஷாவும் தனியாக வெளிநாட்டுக்கு சுற்றுலா சென்று வெளியிட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலானது.

அதுமட்டுமின்றி மாஸ்டர் பட ஆடியோ வெளியீட்டு விழாவுக்கு பின்னர் விஜயின் மனைவி சங்கீதா எந்த ஒரு விழாவிலும் விஜயுடன் இணைந்து பங்கேற்காததால் ரசிகர்களின் மத்தியில் ஏற்கனேவே விஜய்- சங்கீதா பிரிந்து வாழ்கின்றார்கள் என்ற கருத்தும் அவர்களின் பிரிவுக்கு நடிகை திரிஷா தான் காரணம் என்கிற பேச்சும் சமூக வலைதளங்களில் பரவலாக இருந்துவந்தது.
தற்போது மீண்டும் விஜய் மற்றும் திரிஷாவின் பெயர் இணைத்துப் இணையத்தில் பேசப்படு வருகின்றது.

இந்நிலையில் நடிகை திரிஷா போட்ட பழைய பதிவுகளை நெட்டிசன்கள் தோண்டி எடுத்து, அதை மீண்டும் வைராக்கி வருகின்றனர்.
அதில் கடந்த ஆண்டு, மார்ச் 29ஆம் தேதி நடிகை திரிஷா காதல் குறித்து பதிவிட்ட புகைப்படமென்று மீண்டும் வைரலாகியுள்ளது.
குறித்த பதிவில் காதல் என்றுமே வெல்லும் என குறிப்பிட்டுள்ள திரிஷா, மணப்பெண் அழங்காரத்துடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, அந்தப் பதிவில் பின்னணியில் அலைபாயுதே படத்தில் இடம்பெறும் ரகசிய சிநேகிதனே பாடலை ஒலிக்க விட்டிருந்தார் திரிஷா. தற்போது அந்தப் பதிவை பார்த்த நெட்டிசன்கள், "ஓஹோ ரகசிய சிநேகிதனா... இப்பதான் புரியுது" என தற்போதைய சூழலோடு ஒப்பிட்டு கமெண்ட் செய்து வருகின்றனர்.
மேலும் த்ரிஷா விஜய் சுற்றுலாவின் போது எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் உட்பட த்ரிஷாவின் பழைய பதிவுகள் பல இணையத்தை ஆக்கிரமித்து வருகின்றது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |