திருமணத்தை குறித்து குட்டி குழந்தை கேட்ட ஒற்றை கேள்வி! ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா நெகிழ்ச்சி செயல்
ராஷ்மிகா, விஜய் சேதரகொண்டாவின் திருமணம் சமீபத்தில் நடைபெற்ற நிலையில், குழந்தை ஒன்று ஏன் எங்களை திருமணத்திற்கு அழைக்கவில்லை? என கேள்வி கேட்டு ரீல்ஸ் வெளியிட்டதற்கு, இருவரும் செய்துள்ள செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ராஷ்மிகா, விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டாவிற்கு கடந்த பிப்ரவரி மாதம் 27ம் தேதி பிரம்மாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இவர்களின் திருமணம் ஒரு வார காலத்திற்கும் மேல் கொண்டாட்டங்களுக்கு மத்தியில் நடைபெற்றுள்ளது. ஒவ்வொரு நிகழ்வுகளின் புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்று வருகின்றது.

இவர்களின் திருமணத்திற்கு சென்ற யாரும் மொபைல் கொண்டு செல்வதற்கு அனுமதி அளிக்காத நிலையில், தம்பதிகளின் புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிடப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் இவர்களது திருமணத்திற்கு ஏன் கூப்பிடவில்லை? என குழந்தை ஒன்று காணொளியாக ரீல்ஸ் ஒன்றினை வெளியிட்டுள்ளது. இதற்கு விஜய் தேவரகொண்டா கண்டிப்பாக அழைத்து பிடித்த உணவுகளுடன் விருந்து ஏற்பாடு செய்வதாக பதில் அளித்திருந்தார்.
இந்நிலையில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா தம்பதிகள் கூறியபடி குறித்த சிறுமியை, வீட்டிற்கு அழைத்து உணவுகளை பரிமாறி கொஞ்சி மகிழ்ந்துள்ளனர். இக்காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது..
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |