ராஷ்மிகாவுடன் திருமணமா? - வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த விஜய் தேவரகொண்டா
நடிகை ராஷ்மிகா மந்தனாவை திருமணம் செய்ய போவதாக வெளியான தகவலுக்கு நடிகர் விஜய் தேவரகொண்டா விளக்கம் கொடுத்துள்ளார்.
விஜய் தேவரகொண்டா-ரஷ்மிகா மந்தனா
திரையில் மனங்களை கவர்ந்த விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா ஜோடிக்கு விரைவில் திருமணம் ஆக உள்ளது என்பது தான் தென்னிந்திய சினிமாவின் தற்போதைய ஹாட் செய்தியாகவுளள்ளது.
2018ஆம் ஆண்டு வெளிவந்த ‘கீதா கோவிந்தம்’, 2019 இல் வெளியான ‘டியர் காமரேட்’ படங்கள் மூலம், எவர்க்ரீன் ஜோடியாக ரசிகர்கள் மனதில் பதிந்த ஜோடி விஜய் தேவாரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா.
சில மாதங்களாகவே இவர்களை சுற்றி பல வதந்திகள் கிளம்பி வந்தது. இவர்கள் இருவரும் காதலித்து வருவதாக டோலிவுட் முதல் பாலிவுட் வரை பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், அண்மையில் இருவரும் மாலத்தீவுக்கு சென்றது மேலும் சர்ச்சையை கிளப்பியது.
பிப்ரவரியில் இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடக்கவுள்ளதாகவும், இதுகுறித்த அதிகாரபூர்வ தகவலை காதல் ஜோடி விரைவில் அறிவிக்க உள்ளதாகவும் நெட்டிசன்கள் உறுதியே செய்துவிட்ட நிலையில், இது குறித்து விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா இருவரும் எந்தவித விளக்கமும் தர முன் வராமலே இருந்தனர்.
இதனால் இவர்களின் திருமண செய்தி மக்கள் மத்தியில் உறுதியே ஆனது. தற்போது தனது மவுனத்தை களைத்துள்ள நடிகர் விஜயதேவரகொண்டா இதற்கான விளக்கமளித்துள்ளார்.
விளம்பரம் அவர் கூறுகையில், தனக்கு பிப்ரவரி மாதத்தில் திருமணமோ, நிச்சயதார்த்தமோ நடக்க போவதில்லை என்றும், 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை தாம் திருமணம் செய்துக்கொள்ள வேண்டும் என ஊடகங்கள் விரும்புவது போல் உள்ளதாகவும் கிண்டலாக கூறியுள்ளார்.
மேலும், விட்டால் என் கையை பிடித்து என்க்கு திருமணம் செய்து வைத்து விடுவார்கள் போலிருக்கிறது என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார். மேலும் திரையுலக வட்டாரங்கள் இவர்கள் லிவிங் ரிலேஷன் சிப்பில் இருப்பதாக தெரிவிக்கின்றமையும் குறிப்பிட்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |