விஜய் தேவரகொண்டாவுடன் ஒரே வீட்டில் வசிக்கும் விஜய் பட நடிகை! புகைப்படத்தில் சிக்கினர்
நடிகர் விஜய்தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா ஒரே வீட்டில் வசித்து வருவதாக ரசிகர்கள் மத்தியில் ஒரு குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நடிகர் விஜய்தேவரகொண்டா
தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்துக்கொண்டிருக்கும் ஒரே நடிகர் என்றால் அது விஜய்தேவரகொண்டா தான்.
‘பெல்லி சூப்லு’ திரைப்படத்தின் வாயிலாக கதாநாயகனாக மாறிய இவர், ‘அர்ஜூன்ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் அனைத்து ரசிகர்களையும் கவர்ந்தார்.
தொடர்ந்து ‘கீதா கோவிந்தம்’ படத்தில் நடித்ததையடுத்து அவருக்கு பெண்களின் ரசிகர்கள் பட்டாளம் அதிகரித்தது. பின்னர் தமிழில் நோட்டா திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
நடிகை ராஷ்மிகா
தெலுங்கில் வெளிவந்த அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் இளைஞர்கள் மனதில் இடம்பிடித்தவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கார்த்தி நடிப்பில் வெளிவந்த சுல்தான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்க்குள் என்ட்ரி கொடுத்தார்.
இப்படத்தை தொடர்ந்து தளபதி விஜய் நடிப்பில் வெளியாகிய வாரிசு திரைப்படத்தில் கதாநாயகியாகவும் நடித்தார்.
இந்நிலையில் ‘கீதா கோவிந்தம்’ படத்தில் சேர்ந்து நடித்த நடிகர் விஜய்தேவரகொண்டாவுடன் ஒன்றாக ஒரே வீட்டில் இருப்பதாக ஒரு புகைப்படத்தின் மூலம் ரசிகர்களிடன் வசமாக சிக்கிக்கொண்டுள்ளார்.
குழப்பத்தை ஏற்படுத்திய புகைப்படம்
ஏற்கனவே இருவரும் மாலத்தீவு சென்றபோது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தின் மூலம் இணையவாசிகளிடம் சிக்கிக்கொண்டனர். அந்தவகையில் தற்போது தனித்தனியா வெளியிட்ட ஒரு போட்டாவின் மூலம் இருவரும் சிக்கியுள்ளனர் எனலாம்.
அதாவது இருவரும் தனது சமூகவலைத்தளத்தில் தனித்தனியாக அந்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளனர். ஆனால் அந்த புகைப்படமானது ஒரே இடத்தில் இருந்து எடுத்ததை போன்று இருந்துள்ளது. பேக்ரவுண்ட் ஒன்றாக இருப்பதை ரசிகர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
அது விஜய் தேவரகொண்டாவின் வீடு என்றும் இருவரும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருக்கின்றனர் எனவும் ஒரு தகவல் வெளியாகி இருகின்றது.
இதற்கு முதலும் ஒரு கை புகைப்படமானது வெளியாகி, அதில் சீக்கிரமாக அறியத்தருகிறேன் என்று கூறியுள்ளார். இதையடுத்து இப்படி ஒரு புகைப்படமானது வெளியாகியுள்ளதால் இணையவாசிகளிடம் மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.