வெட்கக்கேடானது... விஜய் - திரிஷா செயலால் கோபமடைந்த மக்கள் : வைரலாகும் பரபரப்பு போஸ்ட்!
நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயிடமிருந்து விவாகரத்து கோரி மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ள விடயம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டியே சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், விஜய் ரசிகர்கள் இதுவரையில் விஜய்கு ஆதரவாக பேசி கருத்துக்களை பகிர்ந்து வந்தனர்.

வைரல் காணொளி
ஆனால் நேற்றைய தினம் வெளியான காணொளி இந்த நிலையை சற்று மாற்றிவிட்டது என்று தான் கூற வேண்டும். காரணம் இவ்வளவு சர்ச்சைகளுக்கு மத்தியில், எதைப்பற்றியும் சிந்திக்காமல் விஜய் நேற்று தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு நடிகை த்ரிஷா உடன் வந்திருந்தார்.குறித்த காணொளி இணையத்தையே போர்களமாக மாற்றியுள்ளது.

இதனால் விஜய் ரசிகர்கள் பலரும் பெரும் ஏமாற்றத்திலும், அதிர்ச்சியிலும் ஆழ்ந்திருக்கின்றார்கள். "எந்தத் தளபதிக்காகச் சண்டை போட்டோமோ, அவரே இப்படிச் செய்துவிட்டாரே!" என விஜய் ரசிகர்கள் கொந்தளித்து கருத்துக்களை பதிவிட்டு வருகின்றார்கள்.
சங்கீதா விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி ஒரு வாரம் கூட ஆகாத நிலையில், திரிஷாவுடன் விஜய் ஜோடியாக வலம் வந்துள்ளது 'வெட்கக்கேடானது' "ஆறுதலுக்குக் கூட மனைவி பக்கம் நிற்காமல், இப்படிப் பகிரங்கமாகத் திரிஷாவுடன் ஒரே நிற உடையில் வலம் வருவது நாங்கள் நேசித்த விஜய்க்கு அழகல்ல" என்றும், "குடும்பத்தையும் இழந்து, இப்போது நற்பெயரையும் விஜய் இழந்து வருகிறார்" என்றும் ரசிகர்கள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றார்கள்.

குறிப்பாக, விஜய்யின் மகன் சஞ்சய் அவரை சமூக வலைதளங்களில் 'அன்ஃபாலோ' செய்துள்ளதாக வெளிவந்த செய்தி மற்றும் விஜய்- த்ரிஷா வைரல் காணொளி என்பன விஜயின் வெறித்தனமான ரசிகர்களைக் விஜய்க்கு எதிராக கேள்வியெழுப்ப வைத்துள்ளது.
விஜய் ரசிகரின் பரபரப்பு பதிவு
இந்நிலையில் தான் விஜய் ரசிகர் செய்துள்ள போஸ்டில், நா போற சர்ச்க்கு கொறஞ்சது 3000 பேர் வர்றங்கா அதுல 1000 பேர் கிட்ட சொல்லி வச்சிருந்தேன் இந்த தடவ நம்ம விஜய் அண்ணாக்கு ஒட்டு போடாலாம். அவரும் நம்மள மாதிரி கிறிஸ்டியன் தான்.
நாம தான் அவருக்கு சப்போர்ட் பண்ணனும் ன்னு அவங்களும் சரி உனக்காக போடுறேன்ன்னு சொன்னாங்க. இவ்ளோ நாள் அவங்க dmk க்கு ஒட்டு போட்டுட்டு இருந்தவங்க. இப்போ தூங்கி எழும்பி பாத்த 23 missed call ரொம்ப முக்கியமான ஒருத்தர் போன் மட்டும் அட்டென்ட் பண்ணுனேன்.

அவருக்கு ஒரு 53 வயசு இருக்கும். முதல் வார்த்தையே உங்க ஆளு என்னய்யா இவ்ளோ சீப்பா இருக்காரு இவருக்கா ஒட்டு போட சொல்லி எங்க கிட்ட பேசுன தயவு செஞ்சு இனிமேல் சர்ச்ல பேசதாப்பான்னு சொல்லிட்டு அவரே கட் பண்ணிட்டாரு. ஹலோங்குற ஒரு வார்த்தை மட்டும் தான் நா பேசுனேன்.
தனக்கு தோணுறத பண்ணுறவன் தலைவன் இல்ல... தான் எடுக்குற முடிவு மத்தவங்கள பாதிக்குதான்னு சிந்திச்சு முடிவு எடுக்குறவன் தான் ஒரு தலைவன், என்று கூறி உள்ளார். குறித்த பதிவு இணையத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |