வடக்கன் சர்ச்சைக்கு விஜய் ஆண்டனி தரமான பதிலடி! குவியும் பாராட்டு
நடிகர் விஜய் ஆண்டனி படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தினால் தற்போது சிகிச்சை முடிந்து ஓய்வு பெற்றுவரும் நிலையில், வடக்கன் பிரச்சினையைக் குறித்து பளார் பதிலைக் கூறியுள்ளார்.
நடிகர் விஜய் ஆண்டனி
தமிழ் திரையுலகில் பன்முக திறமையோடு வலம்வரும் நடிகர் விஜய் ஆண்டனி. இவர் பிச்சைக்காரன் 2 படப்பிடிப்பில் ஏற்பட்ட விபத்தின் காரணமாக முகத்தில் அறுவை சிகிச்சை செய்து ஓய்வில் இருந்து வருகின்றார்.
அவ்வப்போது தனது உடல்நிலைக் குறித்து தனது சமூகவலைத்தளம் மூலமாக மக்களுக்கு தகவல் அளித்து வருகின்றார். தமிழகத்தில் சமீப நாட்களாக வட இந்தியர்களின் பிரச்சினை அதிகரித்து வருகின்றது.
கடந்த சில மாதங்களாக தமிழகத்தில் அதிக வட இந்தியாவை சேர்ந்தவர்கள் குடியேறிவிட்டதாகவும், தமிழர்களை அடிக்க துணிந்தவர்கள்... விரைவில் நம்மை அடிமை படுத்துவார்கள் என மதுரை முத்து தனது ஆதங்கத்தினை வெளிப்படுத்தினார்.
பலர் வட இந்தியர்களுக்கு எதிராக தங்களுடைய கருத்தை தெரிவித்து வந்த நிலையில், இது போன்ற கருத்துக்களுக்கு பளார் பதிலடி கொடுக்கும் விதமாக அமைந்துள்ளது, விஜய் ஆண்டனியின் பதிவு.
இது குறித்து தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியுள்ளதாவது, "வடக்கனும் கிழக்கனும் தெற்க்கனும் மேற்க்கனும்... நம்மைப்போல் தன் குடும்பத்தைக்காப்பாற்ற, தினமும் போராடி வாழும், இன்னொரு சக ஏழை மனிதன்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என பதிவிட்டுள்ளார். இந்த பதிவுக்கு ரசிகர்கள் பலர் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகிறார்கள்.