விஜய் ஆண்டனியின் மகள் மரணம்: தற்கொலை குறித்து உருக்கமாக பேசிய வார்த்தைகள்
நடிகர், தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியின் மகள் மீரா இன்று அதிகாலை தற்கொலை செய்து கொண்ட தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றது.
விஜய் அன்டனி
பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் தன் திறமையால் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக் கொண்டார். அவர் ஒரு இசையமைப்பாளராகவதற்கு முன்பு தயாரிப்பாளர், நடிகர், பாடலாசிரியர், எடிட்டர், ஆடியோ பொறியாளர், இயக்குனர் என்று பல வேலைகள் செய்திருக்கிறார்.
விஜய் அன்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, சொந்த தயாரிப்பு நிறுவனத்தையும் நிர்வகித்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு மீரா மற்றும் லாரா என்ற இரு மகள்களும் இருக்கிறார்கள். நடிப்பில் பிஸியாக இருந்த விஜய் அன்டனி தற்போது அவரது நடிப்பில் "ரத்தம்" திரைப்படம் வெளியீட்டிற்குத் தயாராகி வருகிறது.
மகள் தற்கொலை
இந்நிலையில், இன்று அதிகாலை விஜய் அன்டனியின் சென்னையில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை 3 மணிக்கு தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரின் உடலை மீட்டு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட வேளையில் அவர் முன்னதாகவே இறந்து விட்டதாக பரிசோதித்த மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.
உயிரிழந்த மீரா கடுமையான அழுத்தத்தை அனுபவித்து வந்ததாகவும் அதற்கான சிகிச்சையைப் பெற்று வந்ததாகவும் கூறப்படுகிறது.
தற்கொலை குறித்து விஜய் அன்டனி
விஜய் அன்டனியின் மகள் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, அவர் முன்னதாக பிரத்தியேக சேனல் ஒன்றுக்கு அவர் தற்கொலை குறித்து பேசியிருக்கிறார்.
அதில் தற்கொலை செய்துக் கொள்ள வேண்டும் என்று நிறைய பேருக்கு அந்த எண்ணம் வருகிறது என்று கேள்விப்படுகிறேன். இந்த எண்ணம் சிலருக்கு பணத்தினாலும், மற்றவர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கை ஏமாற்றத்தில் முடியும் போது அந்த எண்ணம் வருகிறது.
அதிலும் குறிப்பாக படிப்பினால் மாணவர்களுக்கு பிரஷர் அதிகரிக்கிறது. பள்ளி முடிந்து வந்தவுடன் டியூஷன் போ, அது போ இது போ என அவர்களை நாம் ஒரு இயந்திரமாக பயன்படுத்தி கொண்டு இருக்கிறோம். அதிக பிரஷர் கொடுக்குறாங்க. பிள்ளைகளை சுதந்திரமாக சிந்திக்கவும், படிக்கவும் விடுங்க" என அவர் அதில் பேசியிருக்கிறார்.
இந்த வீடியோவை பலரும் பகிர்ந்து இப்படிப்பட்ட அப்பாவிற்கு பிறந்து இப்படியொரு முடிவை தேடிக் கொண்டாரே என பலரும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |