அரிசியில் நடிகர் விஜய் உருவத்தை வரைந்த ஓவியர் - வைரலாகும் புகைப்படம்
அரிசியில் நடிகர் விஜய் உருவத்தை வரைந்த ஓவியரின் புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அரிசியில் நடிகர் விஜய் உருவத்தை வரைந்த ஓவியர்
தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இவரது ரசிகர்கள் விஜய்யை ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகின்றனர்.
தற்போது நடிகர் விஜய் ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக இப்படத்தில் நடிகை த்ரிஷா நடித்து வருகிறார். இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி இப்படம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், ஓவியர் ஹரிஷ் விஜி என்பவர் நடிகர் விஜய்யின் உருவத்தை அரிசியில் வரைந்துள்ளார்.
தற்போது இது தொடர்பான புகைப்படம் இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த விஜய் ரசிகர்கள் லைக்குகளை அள்ளி தெறித்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

#Thalapathy49 #7days #To #Go pic.twitter.com/Iy2O07ASuU
— Harishviji Artmaster (@HarishvijiArtm1) June 14, 2023