இதனால் தான் நயன்தாராவை திருமணம் செய்யவில்லை- ரசிகரிடம் ஓபனாக பேசிய விக்னேஷ் சிவன்!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையான நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவனும் பல வருடங்களாக காதலித்து வருவது அனைவரும் அறிந்ததே.
மேலும், இதுவரை இவர்கள் திருமணம் செய்துகொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகின்றனர். அடிக்கடி ஊர் சுற்றும் புகைப்படங்களையும், சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது உண்டு.
அதற்கு ரசிகர்களும் எப்போது திருமணம் என கேட்பதும் வாடிக்கையாகவே உள்ளது. இந்நிலையில், விக்னேஷ் சிவன் தயாரிப்பில் நயன்தாரா நடித்துள்ள ‘நெற்றிக்கண்’ படம் ஓடிடி ரிலீஸுக்கு திட்டமிடப்பட்டுள்ள நிலையில், படத்திம் ப்ரோமோஷன் பணிகள் சமூகவலைதளங்களில் துவங்கியுள்ளன.
அதன் ஒரு பகுதியாக படத்தின் தயாரிப்பாளரான விக்னேஷ் சிவன் ரசிகர்களிடம் இன்ஸ்டாவில் கலந்துரையாடினார்.
அப்போது, ரசிகர் ஒருவர் நயன்தாராவுக்கு உங்களுக்கும் எப்போது திருமணம் என்று கேள்வி எழுப்பினார்.
அதற்கு பதிலளித்த அவர், திருமணத்துக்கு ரொம்ப செலவு ஆகும். அதனால் அதற்கான பணத்தை சேர்த்துவிட்டு, கொரோனா அச்சுறுத்தல் எல்லாம் நீங்கிய பிறகு திருமணம் செய்து கொள்வேன் என்று விக்னேஷ் சிவன் தெரிவித்துள்ளார்.