சிறுமிக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் விக்னேஷ் சிவன்.. வைரலாகும் காட்சி
இயக்குனர் விக்னேஷ் சிவன் சிறுமி ஒருவருக்கு தமிழ் கற்றுக்கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக நயன்தாராவும், முன்னணி இயக்குனராக விக்னேஷ் சிவனும் வலம் வருகின்றனர்.
விக்னேஷ் சிவன் நடிகை நயன்தாராவைக் காதலித்து கடந்த 2022ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு உயிர், உலகு என்று இரட்டை குழந்தைகள் உள்ளனர்.

தனது மகன்களையும், மனைவியையும் நன்றாக பார்த்துக்கொள்ளும் விக்னேஷின் புகைப்படங்கள் இணையத்தில் அவ்வப்போது வைரலாகி வருகின்றது.
இந்நிலையில் தற்போது சிறுமி ஒருவருக்கு விக்னேஷ் சிவன் தமிழ் கற்றுக்கொடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது. குறித்த சிறுமியும் விக்னேஷ் கூறுவதை புரிந்து கொண்டு நன்றாக தமிழ் பேசியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |