ஐஸ்வர்யா ராய் விவாகரத்து சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த வீடியோ.. எங்கு எடுத்தது தெரியுமா?
ஐஸ்வர்யா ராயின் விவாகரத்து தொடர்பில் எழும்பிய சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமான வீடியோக்காட்சியொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
விவாகரத்து
முன்னாள் உலக அழகியும், பிரபல பாலிவுட் நடிகையுமானவர் தான் நடிகை ஐஸ்வர்யா ராய். இவர் சினிமாவில் கொடிக்கட்டி பறந்த காலத்தில் ஏகப்பட்ட சர்ச்சைகள் இருந்தன.
இதனை தொடர்ந்து பழம்பெரும் நடிகர் அமிதாப் பச்சனின் ஒரே மகனான, அபிஷேக் பச்சனை தூம் 2 படத்திலிருந்து காதலித்து வந்தார்.
பின்னர் இருவீட்டாரின் சம்பதத்துடன் கடந்த 2007-ஆம் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகிய பெண் குழந்தையொன்று இருக்கிறார்.
திருமணத்திற்கு பின்னரும் நடிகை ஐஸ்வர்யா ராய் திரைப்படங்களில் நடித்து வந்த நிலையில் விவாகரத்து சர்ச்சைகள் அதிகமாக இருந்தது. இதன் காரணமாக சினிமாவிலிருந்து விலகினார்.
பின்னர் சரியான ஒரு கதாபாத்திரம் கிடைத்தால் நடிப்பேன் என கூறியிருந்தார். இதனை தொடர்ந்து ஃபேஷன் நிகழ்ச்சிகளிலும் கணவருடன் கலந்து கொள்வார்.
வதந்திக்கு முற்றுப்புள்ளி
இந்த நிலையில், தற்போது அபிஷேக் பச்சன் - ஐஸ்வர்யா ராயை விவாகரத்து செய்ய போவதாக புகைப்படத்துடன் சர்ச்சையொன்று உமர் சந்துவால் எழுப்பட்டது.
அதில்,“ இருவரும் பிரிவதற்கு தயாராக இருக்கிறார்கள். அபிஷேக் பச்சனின் கையில் திருமண மோதிரத்தை காணவில்லை.. இப்படியான கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.
இதனை முறியடிக்கும் வகையில் குடும்பமாக கருப்பு நிற ஆடை அணிந்து கொண்டு நிகழ்வொன்றிற்கு சென்ற வீடியோக்காட்சி வெளியாகியுள்ளது.
இந்த காட்சியில், மனைவி - குழந்தைகளுடன் அபிஷேக் பச்சன் சிரித்தப்படி இருக்கிறார். வீடியோக்காட்சியை பார்த்த விமர்சகர்கள் “விவாகரத்து சர்ச்சை வதந்தியா?” என கேள்வியெழுப்பி வருகிறார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |