பிரபல நடிகை லைலாவுடன் டூயட் பாடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர்!
பாண்டியன் ஸ்டோர்ஸ் குமரனுடன், பிரபல நடிகை லைலா சேர்ந்து குத்தாட்டம் போடும் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருமணம்
தமிழ் சினிமாவில் 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவரான லைலா தமிழ் முன்னணி நடிகர்களுடன் பல வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
இதனை தொடர்ந்து இவர் 2006 ஆம் ஆண்டு பிரபல தொழிலதிபரான மெஹ்தி என்பரை திருமணம் செய்து கொண்டார்.
இவரின் திருமணம் முடிந்த பிறகு திரையுலகை விட்டு முற்றாக விலகிவிட்டார். கோவாவில் வசித்து வரும் இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
கம்பேக் கொடுக்கும் திரைப்படங்கள்
மேலும் தன்னுடைய இரண்டு குழந்தைகள் பெரியவர்களாக வளர்ந்து விட்டதால், மீண்டும் திரையுலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார்.
இதன்படி, கார்த்தி நடிப்பில் வெளியான “ சர்தார் ” படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இன்னும் நிறைய திரைப்படங்கள் முக்கிய கதாபாத்திர ரோலில் நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
வைரலாகும் வீடியோ காட்சி
இந்நிலையில் 'வதந்தி' மற்றும் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள நடிகர் குமரன் தங்கராஜன், பிரபதேவா பாடலுக்கு நடிகை லைலாவுடன் இணைந்து நடனம் ஆடியுள்ளார்.
இந்த வீடியோக்காட்சி “எப்போதும் உங்களின் ரசிகன், குறிப்பாக இந்தப் பாடலில்.. ” குறிப்பிட்டு தன்னுடை இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த நெட்டிசன்கள் வயதான காலத்திலும் அதே துடிப்பில் இருக்கிறார் லைலா என கருத்துக்களை பதிவிட்டுள்ளார்கள்.