Viral Video; புலியை Walking கூட்டிச் சென்ற பெண் பிரபலம்- அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
புலியை சங்கிலியால் கட்டி இழுத்து சென்ற பெண் பிரபலத்தின் காணொளி இணையவாசிகள் கவனத்தை ஈர்த்துள்ளது.
புலியை இழுத்து சென்ற பெண்
சமூக வலைத்தளங்களில் பிரபலமாக வேண்டும் என்பதற்காகவே சிலர் வித்தியாசமான செயல்களை செய்து வருகிறார்கள்.
இதன்படி, நாடியா கர் என்ற பெண் உலகளவிய ரீதியில் இணையத்தில் பிரபலமானவராக இருக்கிறார்.
இவர் சொகுசு கார்களில் அடிக்கடி வலம் வருவது போன்ற காணொளியை பதிவேற்றி பிரபலமானவர்.
அந்த வரிசையில் சமீபத்தில், துபாயில் உள்ள மிருகக்காட்சி சாலை பூங்காவில் புலியுடன் நடந்து செல்வது போன்ற காணொளியொன்றை பகிர்ந்துள்ளார்.
காணொளியில் “துபாயில் எனது செல்ல புலியை அழைத்து செல்வது வித்தியாசமானது..” எனவும் குறிப்பிட்டிருந்தார்.
காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் பலரின் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில் 60 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். அத்துடன் 1 லட்சத்திற்கும் மேற்பட்டோர் விருப்பங்களையும் தெரிவித்துள்ளனர்.
இப்படியொரு நிலையில், “துபாயில் இப்படி சுற்றித்திரிந்து எவ்வாறு பிரச்சனையில் சிக்காமல் இருக்க முடிகிறது? ” என கேள்வி எழுப்பும் வகையில் கருத்துக்களையும் பயனர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |