பறவைகளின் ராஜாவான கழுகுக்கு வந்த சோதனை! மூச்சு விடாமல் தண்ணீர் குடித்த அவலம்... வைரலாகும் காட்சி
கொரோனா வைரஸ் பரவல் மனிதகள் சமூகத்தை கடுமையாக பாதித்து வருகிறது. இந்த கொடூர வைரஸிடம் இருந்து மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகளை ஆய்வாளர்கள் இரவு பகலாக ஆராய்ந்து வருகின்றனர்.
மனிதர்களின் நடமாட்டம் குறைந்துள்ளதால் பறவைகள் மற்றும் விலங்குகளுக்கு தேவையான உணவுகள் கிடைப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
பறவை ஆர்வலர்கள் பலர் நாள்தோறும் கடற்கரை, கோவில்கள், மலைப் படிகட்டுகள், பூங்காக்களில் பறவைகளுக்கு தேவையான தானியங்கள் மற்றும் அரிசிகளை இரையிடுவதை வழக்கமாக வைத்திருந்தனர்.
கொரோனா அச்சம் காரணமாக, அவர்களும் வீட்டிலேயே முடங்கியிருக்கின்றனர்.
Thirsty eagle..
— Buitengebieden (@buitengebieden_) May 24, 2021
Thank you! ? pic.twitter.com/ljmh7yMlDU
இதனால், பறவைகள் மற்றும் குரங்குகள் தண்ணீர் மற்றும் இரை கிடைக்காமல் தவிக்கின்றன. இந்த சூழலில் நெடுஞ்சாலை ஒன்றில் நடந்து சென்ற ஒரு குழுவினர், கழுகு ஒன்றுக்கு தண்ணீர் கொடுக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.