வீட்டில் பணப்புழக்கம் தாறுமாறாக அதிகரிக்க வேண்டுமா? இந்த ஒரு பொருளில் நிகழும் அதிசயம்
புல் இனத்தைச் சேர்ந்த வெட்டி வேர் அதிகளவு வாசம் உடையதாகவும், மருத்துவ குணம் கொண்டதாகவும் இருக்கின்றது.
நான்கு முதல் ஐந்து அடி உயரம் வரை வளரும் இவற்றின் வேர் கொத்து கொத்தாக இருக்கும். இதன் வேரை வெட்டி எடுத்த பின்பு நடுவே இருக்கும் புல் துண்டை புதிதாக நட்டு பயிரிடுவதால் இதற்கு வெட்டி வேர் என்று கூறப்படுகின்றது.
பணத்தை சேர்க்கும் வெட்டி வேர்
குளிர்ச்சியைத் தரும் வெட்டி வேர் பணத்தினை பெருக்குவதில் ஆன்மீக ரீதியாக அதிக பங்கு கொண்டுள்ளது.
வெட்டி வேர் வீட்டில் இருந்தால் பணக்கஷ்டம் ஏற்படாமல் இருப்பதுடன் பணப்புழக்கமும் அதிகமாக இருக்கும்.
சுத்தமான கண்ணாடி டம்ளரில் நீரை எடுத்துக் கொண்டு அதில் வெட்டி வேர் மற்றும் எலுமிச்சை சேர்த்து வெள்ளிக்கிழமை பூஜை அறையில் வைத்தால், அதன் வாசனை வீடு முழுவதும் பரவுவது போன்று அதன் ஆற்றலும் வீட்டிற்கு லட்சுமி யோகத்தை கொண்டு வந்து சேர்க்குமாம்.
பணம் தேவைப்படும் போது வெட்டிவேரை கையில் வைத்துக் கொண்டு குல தெய்வத்தை வேண்டினால் தேவையான பணம் நிச்சயம் கிடைக்குமாம்.
குறித்த டம்ளரில் போட்டு வைத்திருக்கும் எலுமிச்சையை 3 தினங்களுக்கு ஒரு முறை மாற்றிவிட வேண்டும். ஆனால் அந்த தண்ணீரை வாரம் ஒருமுறை தண்ணீரை மாற்ற வேண்டும். வெட்டி வேரை மட்டும் அப்படியே வைத்துக் கொள்ளவும்.
வெட்டி வேரின் மற்ற பலன்கள்
கோடை காலத்தில் நாம் குடிக்கும் தண்ணீரில் வெட்டிவேரை சிறிது போட்டு குடித்து வந்தால் உடம்பிற்கு நல்ல குளிர்ச்சி கிடைப்பதுடன், உடல் உஷ்ணமும் நன்றாகவே குறைந்துவிடும்.
இவை காய்ச்சல், நீர் எரிச்சல், நீர் கடுப்பு, உடல்சோர்வு, தோல் நோய்கள் மற்றும் மனஅழுத்தம் போன்றவை குறையும்.
வெட்டி வேரை எண்ணெய்யில் ஊற வைத்து கை, கால் பிடிப்புகளுக்குத் தடவி வர நல்ல குணம் கிடைக்கும். தலையில் தேய்த்தால் தலைமுடி கருப்பாக வளர்வதுடன், அடர்த்தியாகவும் காணப்படும்.
காய்ச்சலுக்கு பின்பு ஏற்படும் உடல் சோர்வுக்கு வெட்டி வேரை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து பருகினால் சரியாகும்.
மேலும் அந்த நீரை பருகுவதால் ஜீரணசக்தி அதிகரிக்கும். வயிற்றுப் புண்ணும் குணமாகும். முகத்தில் ஏற்படும் பருக்களை குறைக்க வெட்டி வேர் பயன்படுகிறது.
கோடை காலத்தில் வெட்டி வேரைக் கொண்டு செய்யப்படும் தட்டிகளை ஜன்னல்களில் கட்டி வர அறையின் வெப்பத்தை குறைத்து மணத்தையும் குளிர்ச்சியையும் தரும்.
செரிமானம், சுவாசம், நோயெதிர்ப்பு, நரம்பு, நாளமில்லா சுரப்பி போன்ற எல்லா உறுப்புகளையும் சரி செய்வதுடன், உடம்பில் ஏற்படும் தழும்புகளை குணமாக்கி குறித்த இடத்தில் புதிய திசுக்களை உருவாக்குகின்றது.