சோகத்தில் திரையுலகினர்! அரியவகை நோயால் கமல் பட நடிகர் காலமானார்
தமிழில் கமலின் ஹே ராம் படத்தில் பணியாற்றிய நடிகர் அருண் பாலி காலமானார்.
அவருக்கு வயது 79. myasthenia gravis என்கிற அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அருண் பாலி, தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவு திரையுலகினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் அருண் பாலியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
கமல் நடித்து, இயக்கிய ஹே ராம் படத்திலும் அருண் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
அப்படத்தில் பெங்கால் முதலமைச்சர் கதாபாத்திரத்தில் அவர் நடித்து இருந்தார்.
அருண் பாலியின் இறுதிச்சடங்கும் மும்பையில் நடைபெற உள்ளது. அவரது உடலுக்கு திரைப்பிரபலங்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.