Snake Shedding Skin: இவ்வளவு பெரிய பாம்பு தோலா? புல்லரிக்க வைக்கும் காட்சி
மிக நீளமான பாம்பு ஒன்று தனது தோலை கழற்றியுள்ள நிலையில், குறித்த தோலை காணொளியில் நபர் ஒருவர் காட்டியுள்ளார்.
பாம்பின் தோல்
பாம்புகள் பொதுவாக விஷத்தன்மை அதிகம் கொண்டதாகும். பலரும் பாம்பைக் கண்டால் தலைதெறிக்க ஓடுவார்கள். ஏனெனில் நொடியில் உயிரைப் பறித்துவிடும் என்பதால் தான்.
இவ்வாறு விஷத்தன்மை கொண்ட பாம்புகள் தனது பழைய தோலை உரிக்கும் காட்சிகள் பல நாம் அவதாளித்துள்ளோம்.
இந்த தோலானது பாம்பின் அளவு மற்றும் இனத்தைப் பொறுத்து சில பாம்பின் அளவு மற்றும் இனத்தைப் பொறுத்து சில நிமிடங்களிலிருந்து பல மணிநேரங்கள் வரை நீடிப்பதுடன், இது எங்கு வேண்டுமென்றாலும் நிகழலாம்.
பழைய தோல் பொதுவாக தலையில் இருந்து தொடங்கி வால் வரை ஒரு துண்டாக உதிரும். இதன் விளைவாக, பாம்பின் முன்னாள் வெளிப்புற அடுக்கின் உருவம் அப்படியே இருப்பது போல தோன்றும்.
இவை பாம்பின் வளர்ச்சிக்கும், தனது தோலில் இணைந்திருக்கும் ஒட்டுண்ணிகளை அகற்றவும் உதவுகின்றது. மேலும் சிறிய காயத்திலிருந்தும், குணமடையவும், ஆரோக்கியத்தை பராமரிக்க அனுமதிக்கிறது.
புதிய தோல் பெரும்பாலும் பிரகாசமாகவும் துடிப்பாகவும் இருக்கும், பாம்பின் தோற்றத்தையும், கம்பீரத்தையும் அதிகரிக்கிறது.
இங்கு மிகப்பெரிய பாம்பு தனது தோலை உரித்துள்ள நிலையில், அதனை காணொளியாக நபர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |