Peanut chutney: சளி, இருமலுக்கு நிரந்த நிவாரணம் தரும் வேர்க்கடலை- சட்னி செய்வது எப்படி?
பொதுவாக அநேகமான வீடுகளில் காலையுணவாக பெரும்பாலும் இட்லி, தோசை தான் செய்வார்கள்.
அதற்கு தினமும் ஒரே வகையான சட்னி செய்யாமல் வித்தியாசமாக சட்னி செய்தால் வீட்டிலுள்ளவர்களும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படியாயின், வெறும் 5 பொருட்களைக் கொண்டு வேர்க்கடலை சட்னி செய்யலாம். இது இட்லி, தோசைக்கு மட்டுமின்றி, உப்புமாவுடனும் சேர்த்து சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.
அந்த வகையில், வேர்க்கடலை சட்னி இலகுவாக செய்வது எப்படி? என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
* வேர்க்கடலை - 1/2 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* புளி - சிறிய துண்டு
* வரமிளகாய் - 2-3
* உப்பு - சுவைக்கேற்ப
* பூண்டு - 3 பல்
* தண்ணீர் - சிறிது
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
*பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
சட்னி செய்வது எப்படி?
முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வேர்க்கடலைகளை போட்டு நன்றாக வறுத்து குளிர விடவும்.
பின்னர் வறுத்த வேர்க்கடலையை மிக்ஸி ஜாரில் போட்டு, அதனுடன் துருவிய தேங்காய், சிறிது புளி, வரமிளகாய், சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்றாக அரைக்கவும்.
பூண்டு பற்கள் சேர்த்து கொண்டால் இன்னும் சுவையாக இருக்கும். தேவையிருந்தால் பூண்டையும் சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி, தேவைக்கு ஏற்ப நீர் ஊற்றிக் கலந்து கொள்ளவும். இறுதியாக ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தாளிப்பதற்கு எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, சட்னியுடன் ஊற்றி கலந்து விடவும்.
ரெசிபியில் கொடுக்கபட்டிருக்கும் படிமுறைகளை சரியாக செய்தால் வேர்க்கடலை சட்னியின் சுவை அல்டிமேட்டாக இருக்கும். இது சளி, இருமல் பிரச்சினையுள்ளவர்களுக்கும் நிவாரணம் தருகிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |