14 நாட்களில் 5 ராசிகளுக்கு கோடீஸ்வர யோகம் - அள்ளி கொடுக்கப்போகும் சுக்கிரன்
2026ஆம் ஆண்டு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி, சுக்கிர கிரகம் தனது ராசியை மாற்றிக்கொள்ளப் போகிறார். தனது சொந்த ராசியான ரிஷப ராசயில் நிலைபெறும் சுக்கிரன், 'மாளவ்ய யோகத்தை' உருவாக்கவுள்ளார்.

சுக்கிர பெயர்ச்சி
கிரகங்கள் தங்கள் ராசியை மாற்றிக்கொள்ளும் போது பல யோகங்கள் உருவாகின்றது. ஜோதிடத்தில் சுக்கிர கிரகம் அழகு, படைப்பாற்றல் மற்றும் உலகியல் இன்பங்களுக்கு காரண கிரகமாக கருதப்படுகின்றது.
எனவே சுக்கிர கிரகம் தன்னுடைய ராசியில் இருந்து இன்னுமொரு ராசிக்கு மாற்றும் போது அது குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
ஏப்ரல் மாதத்தில், 19-ஆம் தேதியன்று, சுக்கிரன் மேஷ ராசியிலிருந்து விலகி, தனது சொந்த ராசியான ரிஷப ராசிக்குள் பெயர்ச்சி அடையப் போகிறார்.

இதன் மூலம் 'மாளவ்ய யோகம்' (Malavya Yoga) உருவாகிறது. இந்த யோகம் மிகவும் மங்களகரமான யோகங்களில் ஒன்றாக கருதப்படுவதுடன் இது பொருளாதார ரீதியில் பல மாற்றங்களை கொண்டு வரும் என்று கூறப்படுகின்றது.
ஏப்ரல் 19-ஆம் தேதிக்குப் பிறகு இந்த யோகம் உருவாகிறது. எனவே இந்த சுக்கிர பெயர்ச்சி மூலம் அதிர்ஷ்டம் பெறும் ராசிகள் யார் என்பதை பார்க்கலாம்.

ரிஷபம்
- சுக்கிரன், தற்போது உங்கள் முதல் வீட்டில் (லக்னத்தில்) சஞ்சரிக்கிறார். இதனால் உங்களுக்குள் இருக்கும் பல திறமைகள் வெளிப்படும். கலை போன்றவற்றில் உள்ளவர்கள் நிதி ஆதாயங்களை பெறுவீர்கள். ச5க ஊடகத்தில் நீங்கள் வைரலாக நேரிடும். குடும்ப வாழ்க்கையில் நீங்கள் பெரும் பலனை பெறலாம்.
கடகம்
- சுக்கிரன் கடக 'லாப ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். இதனால் உங்கள் தொழில் மற்றும் வணிக முயற்சிகளில் மிகப்பெரிய லாபங்களைக் கொண்டுவரக்கூடும். உங்கள் மூத்த உடன்பிறப்புகளிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும்.பங்கு சந்தையில் முதலீடு செய்திருந்தால் அதில் நல்ல வருமானத்தை பெறுவீர்கள். நீங்கள் நினைத்தனை சாதிக்கலாம். உங்களுககு வசீகரமான அழகு கிடைக்கும்.
கன்னி
- சுக்கிரன் உங்கள் 'பாக்கிய ஸ்தானத்தில்' சஞ்சரிக்கிறார். அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு உங்களுக்குக் கிடைக்கும். நீண்ட நாட்களாகத் தேங்கிக்கிடந்த அல்லது தடைபட்டிருந்த பணிகள் இப்போது முழுமையாக முடியும். வேலை தேடி கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். சமயம் சார்ந்த விடயங்களில் நீங்கள் ஈடுபடுவீர்கள்.
விருச்சிகம்
- சுக்கிரனின் சஞ்சாரத்தின் காரணமாக, உங்கள் குடும்ப மற்றும் திருமண வாழ்க்கை மிக சிறப்பாக இருக்கும். நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும். பெற்றோரிடமிருந்து உங்களுக்கு ஆதரவு கிடைக்கும். நிதி சார்ந்த சிரமங்கள் தீரும். வேலையில் இருப்பவர்கள் அவர்கள் விரும்பிய இடத்திற்கு மாற்றத்தை பெறுவீர்கள்.
கும்பம்
- சுக்கிரன் உங்கள் நான்காம் வீட்டில் சஞ்சரிக்கிறார். இந்த வீடு சுகம் மற்றும் மகிழ்ச்சியைக் குறிக்கும். இதனால் உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியையும் ஆனந்தத்தையும் கொண்டுவரும். உங்கள் நிதி நிலைமை வலுப்பெறும். சிலருக்கு நிலம் அல்லது வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அமையும். மேலும், உங்கள் தாயாருடன் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரித்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)