டிசம்பரில் சுக்கிர பெயர்ச்சி... 3 ராசியினருக்கு தேடிவரும் அதிர்ஷ்டம்
Sukkra Peyarch: டிசம்பர் 5ம் தேதி நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தினை பெறும் 3 ராசியினரைக் குறித்து தெரிந்து கொள்வோம்.
சுக்கிர பெயர்ச்சி
ஜோதிடத்தில் அசுரர்களில் குருவாக கருதப்படும் சுக்கிரன், அழகு, ஆடம்பரம், காதல், செல்வம், செழிப்பு காரணராக இருக்கின்றார். ரிஷபம் மற்றும் துலாம் ராசியின் அதிபதியாக இருக்கின்றார்.
தற்போது சொந்த ராசியயான துலாம் ராசியில் பயணித்து வருகிறார். இத்தருணத்தில் பஞ்ச மகாபுருஷ ராஜயோகங்களில் ஒன்றான மாளவ்யா ராஜயோகம் உருவாகியுள்ளது.
மேலும் குரு தற்போது சித்திரை நட்சத்திரத்தில் உள்ள நிலையில், டிசம்பர் 5ம் தேதி சுவாதி நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் 17 நாட்கள் வரை இருக்கின்றார்.
ஆனால் சுவாதி நட்சத்திரத்தின் அதிபதியாக ராகு இருக்கும் நிலையில், ராகு மற்றும் சுக்கிரன் நண்பர்களாக கருதப்படுகின்றது. சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் அதிர்ஷ்டம் பெறும் ராசியினரை தெரிந்து கொள்வோம்.

ரிஷபம்
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியால் ரிஷப ராசியினருக்கு பல நன்மைகள் கிடைப்பதுடன், தொழில் ரீதியாகவும் நன்மை கிடைக்குமாம்.
அலுவலகத்தில் புதிய பொறுப்புகள் வழங்கப்படும் வாய்ப்பு கிடைப்பதுடன், நீண்ட நாட்களாக தடைபட்ட வேலைகள் வெற்றியாகவும் முடியும்.
நிதி நிலையும் சிறப்பாக இருப்பதுடன், கடன் தெல்லையிலிருந்து விடுபடவும் செய்வீர்கள். வியாபாரிகளுக்கு புதிய ஒப்பந்தம் கிடைப்பதுடன், எதிரிகளையும் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைக்கும். ஆனால் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் தேவை.

மிதுனம்
மிதுன ராசியினருக்கு சுக்கிரனின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் படைப்பாற்றல் அதிகரிக்கும். கலைத்துறையில் உள்ளவர்கள் நல்ல பலனை பெறுவீர்கள்.
தம்பதிகளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. பொருள் வசதியினை பெறுவதுடன், நிதி ஆதாயத்தினையும் பெறுவீர்கள்.

துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த சுக்கிர பெயர்ச்சியினால் நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடியும். செல்வம் பெருகுவதுடன், நிதி நிலையில் முன்னேற்றம் கிடைக்கும்.
சமூகத்தில் மதிப்பு, மரியாதை அதிகரிப்பதுடன், வேலையில் உள்ளவர்களுக்கு பதவி மற்றும் சம்பள உயர்வு கிடைக்கும் வாய்ப்புகள் உள்ளது.
வியாபரிகளுக்கும் நல்ல லாபம் கிடைக்கும். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும் வாய்ப்புள்ளது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |