அந்த வகையில் சுமாராக 100 ஆண்டுகளுக்கு பின் 3 ராஜயோகங்கள் ஒரே வேளையில் உருவாகவுள்ளன.
அதாவது, சனி பகவான் தனது மூல திரிகோண ராசியான கும்ப ராசியில் பயணிக்கிறார். இதன் விளைவாக சச ராஜயோகம் உருவாகவுள்ளது.
அதே போன்று அசுரர்களின் குருவான சுக்கிரன் மீன ராசியில் இருக்கிறார். இதன் விளைவாக மாளவ்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த நிலையில், மார்ச் 05 ஆம் தேதி ரிஷப ராசியில் குரு மற்றும் சந்திரனின் சேர்க்கையால் கஜகேசரி ராஜயோகம் உருவாகவுள்ளது.
இப்படி மூன்று ராஜயோகங்களும் ஒரே வேளையில் உருவாகுவதால் அதன் தாக்கம் 12 ராசிகளுக்கும் இருக்கும்.
மாறாக குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ளது.
அப்படியாயின், 100 வருடங்களுக்கு பின்னர் இப்படியான ராஜயோகங்கள் உருவாகுவதால் அதிர்ஷ்டம் கிடைக்கவுள்ள ராசியினர் யார் யார் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
மேஷ ராசி
புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம்.
வியாபாரத்தில் புதிய முயற்சி சாதகமாக முடியும்.
குடும்பத்தில் உறவினர்களால் ஏற்பட்ட குழப்பங்கள் நீங்கும்.
ஏதாவது பிரச்சினை ஏற்படின் சிவபெருமானை வழிபட்டால் நல்ல திருப்பங்கள் கிடைக்கும்.
அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வெளியூர்ப் பயணம் தவிர்ப்பது நல்லது.
ரிஷபம் ராசி
எதிலும் பொறுமையைக் கடைப்பிடிக்கவேண்டிய நாள்.
வியாபாரத்தில் விற்பனை சுமாராகத்தான் இருக்கும்.
தந்தையின் உடல்நலனில் கவனம் தேவை.
கணவன் - மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரித்து குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சி உண்டாகும்.
கிருத்திகை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அவசர முடிவுகளைத் தவிர்ப்பது நல்லது.
அம்பிக்கையை வழிபட சிரமங்கள் குறையும்.
மிதுனம் ராசி
நீங்கள் செய்யும் காரியங்களில் அனுகூலம் உண்டாகும்
பிள்ளைகள் பிடிவாதம் பிடிப்பார்கள். இதனால் ஏதாவது பிரச்சினைகள் கூட வரலாம்.
நீண்ட நாட்களாக இருந்த நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் பெறும்.
குரு வழிபாடு நலம் சேர்க்கும்.
மிருகசீரிடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிள்ளைகளால் செலவுகள் ஏற்படக்கூடும்.
கடகம் ராசி
மனதில் உற்சாகம் பெருக்கெடுத்து ஓடும்.
செலவுகள் அதிகரித்தாலும் சமாளித்துவிட முடியும்.
ரொம்ப நாளாக எதிர்பார்த்த நல்ல தகவல் வீடு வந்து சேரும்.
அம்பிகையை வழிபட நல்ல திருப்பம் ஏற்படும்.
புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தவிர்க்கவும்.
சிம்மம் ராசி
அரசாங்கக் காரியங்கள் அனுகூலமாக முடியும்.
வியாபாரத்தில் விற்பனையும் லாபமும் எதிர் பார்த்தபடியே இருக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).