சொந்த ராசியில் சுக்கிரன் பெயர்ச்சி: ஏப்ரலில் இந்த 3 ராசிகளின் வாழ்கையே மாறப்போகுது!
ஜோதிட ரீதியில் நவகிரகங்களின் பெயர்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம், கிரக நிலைகளில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும்,கிரகங்களின் அரிய சேர்க்கையால் உருவாகும் ராஜ யோகங்கள் என்பன 12 ராசிகளிலும் ஆதிக்கம் செலுத்தும்.
குறிப்பாக காதல் மற்றும் ஆடம்பரத்தின் அதிபதியாக திகழும் சுக்கிரன் பெயர்ச்சிக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. அந்தவகையில், அசுரர்களின் குருவாக அறியப்படும், சுக்கிரன் ஏப்ரல் 19 ஆம் தேதி தனது சொந்த சொந்த ராசியான ரிஷப ராசிக்கு நகர்கின்றார்.

தனது சொந்த ராசியில் நிகழும் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் பிரதிபலித்தாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு ஏப்ரலில் ராஜவாழ்க்கை காத்திருக்கின்றது.
அப்படி சுக்கிரனால் உச்சகட்ட அதிர்ஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

ரிஷப ராசி சுக்கிரனால் ஆளப்படும் ராசியாகும் எனவே தனது சொந்த ராசியில் நிகழும் இந்த பெயர்ச்சியால் இவர்களின் வாழ்வில் இதுவரையில் இல்லாத அளவுக்கு நிதி நிலையில் ஏற்றம் உண்டாகும்.
புதிய தொழில் ஆரம்பிக்க வேண்டும் என்ற இவர்களின் நீண்ட நாள் கனவு நனவாகும். இந்த காலகட்டத்தில் இவர்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.
சுக்கிரன் ஆசியால் ஆரம்பர வாழ்க்கையை அனுபவிப்பதற்கான யோகம் உண்டாகும். புதிய நிலம் வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் காணப்படுகின்றது.பணத்துக்கு பஞ்சமே இருக்காது.
கன்னி

சுக்கிரன் பெயர்ச்சியால் கன்னி ராசியினரின் தொழில் வாழ்க்கையில் அமோக முன்னேற்றம் உண்டாகும்.
இவர்களுக்கு இதுவரையில் இருந்துவந்த நிதி சிக்கல்கள் நீங்கி பல வழிகளிலும் வருமானத்துக்கான வழிகள் திறக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியான சூழலும் உருவாகும். சுக்கிரன் ஆசியால் திருமண வாழ்வில் ஈடுபாடு அதிகரிக்கும். பிரிந்த தம்பதியினர் ஒன்றுசேருவதற்கான வாய்ப்புகள் தானாகவே உருவாகும்.
சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிர பெயர்ச்சி வாழ்வில் பல்வேறு வழிகளிலும் சாதக மாற்றங்களையும், அதிர்ஷ்ட பலன்களையும் கொடுக்கும்.
குறிப்பாக பொருளாதார ரீதியில் அசுரை வளர்ச்சி உண்டாகும். இவர்களுக்கு எங்கிருந்து பணம் வருகின்றது என மற்றவர்கள் பார்த்து வியக்கும் அளவுக்கு ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள்.
முன்னைய முதலீடுகளில் இருந்து எதிர்ப்பாராத வகையில், பெரிய தொகை பணம் லாபமாக கிடைக்கும். வெள்ளியில் முதலீடு செய்வதால் சுக்கிரனின் ஆற்றல் மற்றும் ஆசி முழுமையாக கிடைக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |