சுக்கரன்- ராகு இணைப்பு: 2025 இல் பணத்தில் புறளப்போகும் 3 ராசியினர்... யார் யார்ன்னு தெரியுமா?
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகள் ஒருவருடைய ராசியில் பெருமளவில் ஆதிக்கம் செலுத்துகின்றது என தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
ஒருவருடைய ராசியில் ராகு மற்றும் சுக்கிரனின் நிலைக்கு இந்து மதத்தில் மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது.
சுக்கிரன் உலகத்து இன்பங்களுக்கு அதிபாதியாக திகழ்பவர். ராசியில் சுக்கிரக் வலுபெற்றால் தான் செல்வம் பெருகும், அது போல் ராகு நல்ல ஸ்தானத்தில் இருந்தால் தான் ஆரோக்கியம் மேம்படும்.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான கிரக பெயர்ச்சி பலன்கள் கணிப்பின் அடிப்படையில், ராகு சுக்கிரன் சேர்க்கை குறிப்பிட்ட சில ராசியினருக்கு மாபெரும் அதிர்ஷ்டத்தை குவிக்கப்போகின்றது. அப்படி சுப பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
கடகம்
ராகு மற்றும் சுக்கிரன் இணைப்பால் கடக ராசியில் பிறந்தவர்கள் 2025 ஆம் ஆண்டில் சகல விதமான செல்வ செழிப்பையும் பெற்று ஆடம்பர வாழ்வை வாழப்போகின்றார்கள்.
தொழில் ரீதியில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும். உயர் பதிவியில் அமர்வதற்கான வாய்ப்புகள் தேடி வரும்.
வீட்டுக்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி மற்றும் ஒற்றுமை அதிகரிக்கும். நிதி நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
துலாம்
துலாம் ராசியினருக்கு இந்த கிரக இணைப்பால் அலுவலகத்தில் சிறப்பான பலன்கள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் கூடிவரும்.
அவர்களின் வாழ்க்கையில் இருந்துவந்த கடன் பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி பணப்புலக்கம் அதிகரிக்கும்.
2025 ஆம் ஆண்டு முழுவதுமே தன்னம்பிக்கை மற்றும் உடல் ஆரோக்கியம் என்பன சிறப்பாக இருக்கும். சுக்கிரன் ஆசியால், சொத்துக்களை வாங்கி மகிழும் வாய்ப்புகள் அதிகரிக்கும்.
மீனம்
மீன ராசியினருக்கு இந்த கிரக இணைப்பால் எதிர்பாராத வகையில் பணவரவு அதிகரிக்கும். சகல செல்வங்களையும் பெற்று ராஜ வாழ்க்கை வாழக்கூடிய யோகம் உண்டாகும்.
கடந்த ஆண்டுகளில் இருந்து வந்த நிதி பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும். 2025 ஆம் ஆண்டில் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படும்.
திருமண வாழ்க்கை மற்றும் குடும்ப உறுப்பினர்களிடையே இருந்து வந்த பிரச்சினைகளுக்கு சுமூகமான தீர்வு கிடைக்கும். மணவாழ்வில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |