வங்கி இருப்பை சட்டென உயர்த்தும் லாப திருஷ்டி யோகம்- 164 வருட காத்திருப்பின் பலன் இன்று
ஜோதிடங்கள் நமது அன்றாட வாழ்க்கையுடன் பின்னி பிணைக்கப்பட்டுள்ளது.
கிரகங்கள் பெயர்ச்சி, வக்ர நிலை, வக்ர நிவர்த்தி ஆகியன நமது வாழ்க்கையில் பல்வேறு மாற்றங்களை செய்கின்றன. ஒவ்வொரு ராசியில் பிறந்தவர்களுக்கும் கிரகங்களின் நிலை மாறும் பொழுது பாரிய மாற்றங்கள் ஏற்படுகின்றன.
உதாரணமாக கிரக மாற்றங்கள் ஏற்படும் பொழுது சிலருக்கு பலன்களாகவும், சிலருக்கு பிரச்சினையாகவும் இருக்கும்.
நவகிரகங்களின் ஒன்றாக பார்க்கப்படம் நெப்டியூன் தனது ராசியை 13 ஆண்டுகள் ஒருமறை மாற்றுகிறது. இந்த சுழற்சியானது 164 ஆண்டுகளுக்கு பின் தான் நடக்கும் என ஜோதிடம் கூறுகிறது.
இதன்படி, நெப்டியூன் தற்போது மீன ராசியில் பயணம் செய்கிறார். இன்றைய தினம் டிசம்பர் 02 ஆம் தேதி, அசுரர்களின் குருவாக கருதப்படும் சுக்கிரன் உடன் இணைந்து சுப யோகம் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதனால் லாப திருஷ்டி யோகம் உருவாகி குறிப்பிட்ட சில ராசிகளுக்கு மாத்திரம் பணவரவை அதிகப்படுத்தியுள்ளது.
விருச்சிக ராசியில் பயணம் செய்யும் சுக்கிரன் ராசிகளுக்கு இதன் தாக்கம் இருக்கும். இந்த மகத்தான வெற்றியை கொண்டாடும் ராசியினர் யார் யார் என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
நெப்டியூன் பெயர்ச்சியின் பணவரவு யோகம்

1. சிம்மம்
- சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு இந்த பெயர்ச்சியால் வசதிகள் அதிகமாக இருக்கும். ஆடம்பரமாக இருக்க பழகியவர்களுக்கு இந்த மாற்றத்தினால் பெரிய மாற்றங்கள் ஏற்படும். பயணம் செல்லும் வாய்ப்பு கிடைக்கும். இதனை பயன்படுத்தி உங்களை கனவுகளை நினைவாக்கிக் கொள்ளுங்கள். வணிகத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் உறவு வலுவாக்கப்படுவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும்.
2. கன்னி
- கன்னி ராசியில் பிறந்தவர்கள் இந்த மாற்றத்தினால் அதிர்ஷ்டக்காரர்களாக இருப்பார்கள். முயற்சியினால் பாரியளவு வெற்றிக் கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் இருப்பவர்கள் கோயில்களுக்கு அதிகளவு செல்வார்கள். நிறைய பணம் சேமிக்கும் வாய்ப்பு கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் வெளிப்படையாக பேசலாம்.
3. தனுசு
- தனுசு ராசியில் பிறந்தவர்கள் லாப திருஷ்டி யோகத்தால் வெற்றியாளர்களாக மாறுவார்கள். நீண்ட காலமாக காத்திருப்பவர்களுக்கு லாபம் கிடைக்கும். தனிப்பட்ட வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். துணையுடன் அன்பாக இருப்பதற்கு சந்தர்ப்பங்கள் உருவாகும்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |