வெள்ளரிக்காய் சாம்பார் செய்வது எப்படி? ஒருவாட்டி செஞ்சீங்கனா மறக்க மாட்டீங்க
கோடைக்காலம் வந்துவிட்டால் சந்தையில் சில காய்கறிகள் மற்றும் பழங்கள் வழக்கத்திற்காக மாறாக கிடைக்கும் விலையை விட கொஞ்சம் குறைவாக கிடைக்கும்.
அப்படியாயின், சந்தையில் அதிகமானோரால் வாங்கப்படும் காய்கறிகள் ஒன்று தான் வெள்ளரிக்காய்.
இது கோடைக்காலங்களில் உடலுக்கு தேவையான நீர்ச்சத்தை வழங்குகிறது. கோடையில் இந்த வெள்ளரிக்காயை அதிகம் உட்கொள்ளும் போது தாகம் தணிவதோடு, உடல் நீரேற்றமாகவும் இருக்கும்.
வீட்டில் சிலர் வெள்ளரிக்காய் சாப்பிட மறுப்பவர்களுக்கு வித்தியாசமான முறையில் சமைத்துக் கொடுக்கலாம். வெள்ளரிக்காய் கொண்டு சாம்பார் செய்து கொடுக்கலாம். இதனை சாதம், தோசை, இட்லி என அனைத்திற்கு வைத்து சாப்பிடலாம்.
அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான வகையில் எப்படி வெள்ளரிக்காய் சாம்பார் வைக்கலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
- வெள்ளரிக்காய் – 1 medium size (தூக்கி தோல் சீவி நறுக்கவும்)
- துவரம் பருப்பு – ½ கப்
- சாம்பார் பொடி – 1½ மேசைக் கரண்டி
- மஞ்சள் தூள் – ¼ மேசைக் கரண்டி
- பெருங்காயம் – சிட்டிகை
- உப்பு – தேவையான அளவு
- புளி – ஒரு சிறிய எலுமிச்சை அளவு (தண்ணீரில் ஊறவைக்கவும்)
- தக்காளி – 1 (நறுக்கியது – விருப்பப்படி)
- கருவேப்பிலை – சில
- கொத்தமல்லி – அலங்கரிக்க (நறுக்கியது)
தாளிக்க தேவையான பொருட்கள்
- எண்ணெய் – 2 மேசைக் கரண்டி
- கடுகு – ½ மேசைக் கரண்டி
- வெந்தயம் – ¼ மேசைக் கரண்டி
- சுக்கு/சீரகம் – விருப்பப்படி
- சீரகத்தூள் – ¼ மேசைக் கரண்டி
- வத்தல் – 2 (கிழித்து போடவும்)
சாம்பார் வைப்பது எப்படி?
துவரம் பருப்பை நன்றாக கழுவி, 2–3 விசில் வரை வேக விட்டு மசித்து ஒரு பக்கமாக வைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், வெள்ளரிக்காயை துண்டுகளாக நறுக்கி, அதில் சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து, மிதமான தீயில் வேக விடவும். வெந்ததும், அதில் புளி நீர், சாம்பார் பொடி, பெருங்காயம், தக்காளி சேர்த்து கொதிக்க விடவும்.
அதனுடன் மசித்து வைத்திருக்கும் பருப்பைச் சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து 5-10 நிமிடம் கொதிக்க விடவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கிளறி விடவும்.
கடைசியாக அடுப்பில் ஒரு வாணலியை வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி, தாளிக்க தேவையான பொருட்கள் சேர்த்து தாளிக்கவும்.
கடைசியாக கொத்தமல்லி தூவி பரிமாறினால் சுவையான வெள்ளரிக்காய் சாம்பார் தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |