சைவ உணவுப்பிரியர்களா நீங்கள்? இந்த பதிவை கட்டாயம் படிங்க
நம்மில் சிலர் சில காரணங்களுக்காக சைவ உணவுப்பிரியர்களாக மாறியிருப்போம். ஆனால் சிலர் பிறந்ததிலிருந்தே சை உணவுகளை மட்டுமே சாப்பிட்டு வாருவர்கள்.
இதற்கு காரணம் தங்களது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு உணவு பழக்கத்தை தெரிவு செய்கின்றனர். நன்கு திட்டமிட்ட சைவ உணவு ஆரோக்கியமான மற்றும் சீரான வாழ்க்கை்கு தேவைப்படுகின்றது. சைவ உணவுகளை விரும்பி சாப்பிடுபவர்களுக்கு சில டயட் டிப்ஸ்
சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு
சைவ உணவு முறையினை பின்பற்றும் போது வேகவைத்த காய்கறிகளை சாப்பிட்ட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். நாம் உண்ணும் சைவ உணவுகளில் புரதம், வைட்டமின், கனிமங்கள் இருந்தால் மிகவும் நல்லதாம். இவை அனைத்து செல்ல மற்றும் உறுப்புகளுக்கு தேவையான சக்தியை கொடு்ப்பதுடன் எடை குறைக்கவும் செய்கின்றது.
புரதம் அதிகளவில் நமது உடம்பிற்கு தேவைப்படுகின்றது. அசைவ உணவுகளில் கிடைக்கும் புரதச்சத்து தாவர உணவுகளில் கிடைக்கும். பயிர் வகைகள், முளை கட்டிய பயிர்கள், நட்ஸ்கள் இவற்றினை எடுத்துக்கொண்டால் தேவையான புரதச்சத்தை பெறலாம்.
வைட்டமின் B12, இரும்புச்சத்து, கால்சியம், சிங்க் போன்றவை ஊட்டச்சத்துகள் என அழைக்கப்படுகின்றன. உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இவ்வாறான ஊட்டசத்து உணவையே எடுத்துக் கொள்ள வேண்டும். பச்சை வண்ண காய்கறிகள் மற்றும் ஒரு சில நீர்சத்து நிறைந்த பழங்களில் ஊட்டச்சத்து அதிகமாகவே உள்ளது.
மூளைக்கு மிகவும் அவசியமான ஒன்று தான் ஒமேகா 3. இவை உள் உறுப்புகளுக்குள் ஏற்படும் குறைபாட்டை தடுக்குமாம். இந்த சத்தானது ஆளி, சியா போன்ற விதைகளிலும், வால் நட்ஸ் இவற்றிலும் கிடைக்கின்றது.
நமது எலும்பிற்கு மிகவும் தேவையான சத்து தான் வைட்டமின் டி ஆகும். காலை சூரிய ஒளியில் நின்றால், வைட்டமின் டி கிடைக்கும். மேலும் தாவரம் சார்ந்த உணவுகள், பால் ஆகியவையாலும் கிடைக்கின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |