முட்டையே இல்லாமல் நாவூரும் சுவையில் சைவ முட்டை குழம்பு! எப்படி செய்வது?
பொதுவாகவே அசைவ பிரியர்களின் விருப்பட்டியலில் முட்டைக்கும் தனித்துவமான இடம் இருக்கும். காரணம் எளிதில் இதை சமைத்துவிட முடியும்.
அப்படி முட்டை பிரியர்களின் மத்தியில் முட்டை குழம்புக்கு எப்போதும் தனி இடம் உண்டு. இந்த முறையில் சமைத்தால் அவைசம் சாப்பிடாதவர்களும் முட்டை குழம்பின் சுவையை அறிய முடியும்.

பார்ப்பதற்கு மட்டுமன்றி சுவையும் அசல் முட்டை குழம்பு மாதிரியே இருக்கும்.முட்டையே இல்லாமல் முட்டை குழம்பு செய்யலாம் தெரியுமா?
ஆம் அசல் முட்டையின் சுவையில் வைவ முட்டை குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்
பச்சரிசி மாவு - அரை கப்
தேங்காய்ப்பால் - அரை கப்
உப்பு - தேவையான அளவு
சீரகம் - கால் தே.கரண்டி
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை - ஒரு தே.கரண்டி
குழம்புக்கு தேவையானவை
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 4
புளி - ஒரு எலுமிச்சை அளவு
மிளகாய் தூள் - 2 1/2 தே.கரண்டி
தனியாதூள் - 1தே.கரண்டி
மஞ்சள்தூள் - 1/4 தே .கரண்டி
உப்பு - தேவையான அளவு
பூண்டு - 6 பல்
கறிவேப்பிலை மற்றும் மல்லி இலை - சிறிதளவு

அரைக்க தேவையானவை
முந்திரி - 6
தேங்காய் துருவல் - 3 தே.கரண்டி
சோம்பு - கால் தே.கரண்டி
தாளிக்க
பட்டை- ஒரு துண்டு
சோம்பு - 1/4 தே .கரண்டி
சீரகம் - 1/4 தே .கரண்டி
வெந்தயம் - 1/4 தே .கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
எண்ணெய் - 1/4 கப்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து இதில் தேங்காய்ப்பாலை சேர்த்து அதில் உப்பு போட்டு கொதி வரும் பொழுது இறக்கி அரிசி மாவு மற்றும் சீரகம், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து நன்றாக கிளறி சிறுசிறுஉருண்டைகளாக உருட்டி தனியாக அடுத்துக்கொள்ள வேண்டும்.
அதனையடுத்து பூண்டு, வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் புளியை இரண்டரை கப் தண்ணீரில் கரைத்து வடிகட்டி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் அரைக்கக் கொடுத்துள்ள பொருட்களை ஒரு மிக்ஸி ஜாரில் ஒன்றாக சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.

அதனையடுத்து ஒரு பாத்திரத்தை அடுபில் வைத்து எண்ணெயைக் காயவைத்து, தாளிக்கும் பொருட்களைச் சேர்த்து, பூண்டு, வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அவை நன்கு வதங்கியதும் தக்காளி, மிளகாய்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து வதக்கி, பச்சை வாசனைபோன பின்னர் புளிக்கரைசலை சேர்த்து நன்றாக கொதிக்கவிட்ட வேண்டும்.
நன்றாக கொதிக்கும் போது, ஏற்கனவே உருட்டிவைத்திருக்கும் அரிசி மாவு உருண்டைகளைப் போட்டு நன்றாக வேகவைத்து , அரைத்த முந்திரி விழுதை அதில் சேர்த்து, 2 நிமிடம் கொதிக்கவிட்டு இறக்கினால் அவ்வளவு தான் அசத்தல் சுவையில் சைவ முட்டை குழம்பு தயார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |