சைவ பிரியர்கள் பிடித்த லாலிபாப்- சிக்கனை விட சூப்பரா இருக்கும்

DHUSHI
Report this article
பொதுவாக வீடுகளில் இருக்கும் குழந்தை புதிய சாப்பாடு வகைகளை தான் அதிகமாக விரும்புவார்கள்.
அதுவும் குறிப்பாக வீடுகளில் மாலை நேரம் ஊற்றும் டீயுடன் ஏதாவது சாப்பிட வேண்டும் என வீட்டிலுள்ளவர்களிடம் கேட்டுக் கொண்டிருப்பார்கள்.
பசியுடன் வீடு திரும்பும் குழந்தைகளுக்கு அவருக்கு பிடித்தமான லாலிபாப் செய்து கொடுக்கலாம். இதற்காக வீட்டில் சிக்கன் இருக்க வேண்டும் என அவசியம் இல்லை.
மாறாக வீட்டிலுள்ள காய்கறிகள் மற்றும் கிழங்கு வகைகளை வைத்து சுவையாகவும் அவருக்கு பிடித்தமாகவும் செய்யலாம்.
அந்த வகையில், அனைவருக்கும் பிடித்தமான வெஜ் லாலிபாப்பை எப்படி செய்யலாம் என்பதனை பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- உருளைக்கிழங்கு - 4
- துருவிய கேரட் - 1
- நறுக்கிய குடைமிளகாய் - 1/2
- வெங்காயம் - 1
- பச்சை மிளகாய் - 2
- துருவிய பன்னீர் - 250 கிராம்
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
- பிரட் - 2
- உப்பு - தேவையான அளவு
லாலிபாப் மேல் மசாலாவுக்கு தேவையான பொருட்கள்
- சோள மாவு - 1 டீஸ்பூன்
- மைதா மாவு - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 சிட்டிகை
- மிளகுத்தூள் - 1 சிட்டிகை
- தண்ணீர் - தேவையான அளவு
- பிரட் தூள் - 2 கப்
- குச்சிகள் - 5
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
முதலில் உருளைகிழங்கை வேக வைத்து தனியாக எடுத்து கொள்ளவும். மசித்த உருளைகிழங்கில் கேரட், குடை மிளகாய், வெங்காயம் ஆகிய பொருட்களை சேர்ந்து நன்றாக பிசைந்து எடுத்து கொள்ளவும்.
அதனுடன் பன்னீர், மிளகாய்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து கலந்து விட்டு பச்சை மிளகாய் மற்றும் பிரட் தூள் சேர்ந்து பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை லாலிபாப் குச்சிகளில் சிக்கன் போன்று வடிவமைத்து ஒரு தட்டில் தனியாக வைக்கவும்.
அதன் பின்னர், ஒரு சிறிய பாத்திரத்தில் சோள மா, மைதா மா, மிளகுதூள், உப்பு, தண்ணீர் சேர்த்து கரைச்சல் தயார் செய்து வைத்து கொள்ளவும். அதில் தயார் நிலையில் இருக்கும் லாலிபாப் மேல் பக்கம் பிடித்து கொண்டு கரைச்சல் நனைத்து வைக்கவும்.
ஒரு தட்டில் பிரட் தூளை கொட்டி அதில் வெஜ் லாலி பாப்களை மெதுவாக எல்லா பக்கங்களிலும் படுமாறு பிரட்டி எடுத்து சூடான எண்ணெய் போட்டு பொரித்து எடுத்தால் வெஜ் லாலிபாப் தயார்!
ஒரு பிளேட்டில் வெஜ் லாலி பாப்களை வைத்து அதனுடன் தக்காள் சாஸ் சேர்த்து பரிமாறினால் சுவை நன்றாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |