Veera: அடித்துக் கொண்ட அண்ணன் தம்பிகள்! பிரியும் நிலையில் ராமச்சந்திரன் குடும்பம்... பேரதிர்ச்சியில் வீரா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்றான வீராவில் இதுவரை ஒற்றுமையாக இருந்த அண்ணன் தம்பதிகள் தற்போது அடித்துக் கொண்டு சண்டை போடுகின்றனர்.
வீரா
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி வரும் வீரா சீரியலில் பல சூழ்ச்சிகள் அரங்கேறி வருகின்றது. சூழ்ச்சியினால் ராமச்சந்திரன் குடும்பம் தன்னிடம் இருந்த சொத்தை இழந்துள்ளனர்.
தற்போது வீரா மாறன் நடத்திவரும் துணிக்கடையில், அனைவரும் வேலை செய்து வருகின்றனர். விஜி சூழ்ச்சி செய்து வாங்கிய ராமச்சந்திரனின் துணிக்கடையில் கண்மணி மட்டும் வேலை செய்து வருகின்றார்.
மாறன் கடையில் வாசலில் ராமச்சந்திரன் அமர்ந்திருப்பதால், துணி எடுக்க வருபவர்கள் மாறன் கடையிலேயே எடுப்பதால் வியாபாரம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்நிலையில் மாறனுக்கும், ராகவனுக்கும் சண்டை ஏற்பட்டுள்ளது. பணம் விடயத்தில் ஆரம்பித்த சண்டை வீட்டிலும் தொடர்கின்றது. இதில் ராகவன் மாறனை அடித்துள்ளார். இதனை தடுக்க சென்ற வீராவை சத்தம் போட்டு தலையிடாமல் செல்லக் கூறியுள்ளார்.
வீட்டில் நடக்கும் பிரச்சனையை அவதானித்த கண்மணியும் பெரும் அதிர்ச்சியில் காணப்படுகின்றனர்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |