Vazhakkai Coconut Fry: வாழைக்காய் வறுவல் செய்வது எப்படி?
வாழைக்காய் மற்றும் தேங்காய் கொண்டு சுவையான வறுவல் செய்வது எப்படி என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வாழைக்காய் - 2
வெங்காயம் - 1
பூண்டு - 7 பற்கள்
துருவிய தேங்காய் - 1/2 கப்
எண்ணெய் - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள், காஷ்மீர் மிளகாய் தூள், தனியா தூள்- தேவையான அளவு
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 2
பெருங்காயத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை
வாழைக்காயை சுத்தம் செய்து விட்டு குக்கரில் தோளோடு சேர்த்து வேக விடவும்.
2 விசில் வந்த பின்னர் தோலை நீக்கிவிட்டு நறுக்கி கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு சேர்த்து தாளிக்கவும், காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் சேர்க்கவும்.
வதங்கிய பின்னர் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும், பொன்னிறமாக வந்த பிறகு இடித்து போட்டு பூண்டை சேர்க்கவும்.
பச்சை வாசனை போன பின்னர் மசாலா பொடிகள் சேர்த்து உப்பு சேர்த்து கிளறி விடவும்.
பின்னர் வேகவைத்த வாழைக்காயை சேர்த்து கலந்து விடவும், 2 நிமிடம் அப்படியே விட்டு விடலாம்.
கடைசியாக துருவிய தேங்காய், கருவேப்பிலை சேர்த்து கிளறினால் வாழைக்காய் தேங்காய் வருவல் தயார்
