இந்த அறிகுறிகள் இருக்கா? அப்போ உங்க வாழ்கையில் அதிர்ஷ்டம் வருவது உறுதி!
பொதுவாகவே மனிதர்களாக பிறப்பெடுத்த அனைவரும் ஆரோக்கியமான உடலுடனும், செல்வ செழிப்புடனும் நீண்ட காலம் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்று தான் ஆசைப்படுகின்றார்கள். ஆனால் எல்லோருக்குமே அவ்வாறான வாழ்க்கை அமைவது கிடையாது.
ஜோதிட சாஸ்திரம், கனவு சாஸ்திரம் மற்றும் வாஸ்து சாஸ்திரத்தின் பிரகாரம் நமது வாழ்வில் வெற்றிகளும் செல்வ செழிப்பும் அதிகரிக்க போகின்றது என்றால், அதனை சில அறிகுறிகள் மூலம் உணர முடியும் என குறிப்படுகின்றது.

குறிப்பாக, நம்மை சுற்றியுள்ள ஆற்றல்கள் நமது நிதி நிலையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருவதாக நம்பப்படுகிறது.அந்வகையில் எவ்வாறான அறிகுறிகள் உங்களுக்கு அதிர்ஷ்டம் கிட்டப்போவதை குறிக்கின்றது என்பது குறித்து இந்த பதிவில் பார்கலாம்.
அதிர்ஷ்டத்தின் அறிகுறிகள்
கனவில் தாமரை மலர்கள் வருகின்றது என்றால் உங்கள் வாழ்வில் வேலை, படிப்பு, வணிகத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகின்றது என்று அர்த்தம். இவ்வாறான கனவுகள் நேர்மறை ஆற்றல்கள் உங்களை சுற்றி நிறைந்திருக்கும் போது தான் வரும்.

உங்களுக்கு வெற்றி கிடைக்கப்போவதை உணர்த்தும் முக்கிய அறிகுறியான தாமரை மலர் நேர்மறை ஆற்றல், அமைதி, தூய்மை, அதிர்ஷ்டம், ஆன்மீக முன்னேற்றத்தின் அடையாளமாக பார்க்கப்படுகின்றது.

பிரம்ம முகூர்த்தத்தின் போது அதாவது அதிகாலை 3:30 முதல் 6:00 மணி வரையாக காலப்பகுதிக்குள் அலாரம் வைக்காமலேயே உங்களுக்கு விழிப்பு நிலை ஏற்படுகின்றது என்றால், உங்கள் வாழ்வில் வசந்த காலம் ஆரம்பமாக போகின்றது என்று அர்த்தம். அதாவது உங்களின் நேர்மறை எண்ணங்கள் பிரபஞ்சத்தின் ஆற்றலோடு தொடர்பில் உள்ளது என்று அர்த்தம்.
உங்களுடைய வாழ்க்கை சரியான பாதையில் செல்லப் போகிறது என்பதற்கான நல்ல அறிகுறியாகும்.இந்த அறிகுறிகள் தென்பட்ட பின்னர் நீங்கள் எதை செய்தாலும் வெற்றிகள் குவியம். பணவரவு எதிர்ப்பார்ப்பதை விடவும் அதிகமாக இருக்கும்.

வீட்டைச் சுற்றி கடவுளின் நாமம் உச்சரிக்கப்படுவதை கேட்கின்றீர்கள் என்றால், உங்களுக்கு செழிப்பு வரப்போகிறது என்று அர்த்தம். அது வாழ்வில் அதிர்ஷ்டம் வரபோகின்றது மற்றும் கடவுளின் முழுமையான ஆசீர்வாதம் உங்களுக்கு இருக்கின்றது என்பதையே உணர்த்துகின்றது.

வீட்டிற்கு எதிர்பாராத விதமாக பசுக்கள் வந்தால் அது நல்ல அறிகுறியாகும். பசுக்களைப் பார்க்கும்போது முடிந்தால் அவற்றிற்கு ஏதாவது சாப்பிடக் கொடுங்கள். இது உங்கள் வாழ்வில் அனைத்து செல்வ செழிப்பையும் கொண்டுவரப்போகின்றது என்று அர்த்தம்.

மேலும் வீட்டிற்கு ஆந்தை, கிளி ஆகிய பறவைகள் வருவது செல்வத்தின் அடையாளமாகவே பார்க்கப்படுகின்றது மேற்குறிப்பிட்ட அறிகுறிகளில் ஏதாவது ஒன்றை உணர்ந்தாலும் உங்கள் வாழ்கை நீஙகள் விரும்புவது போல் மாறப்போகின்றது என்று அர்த்தம்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |