Vastu Tips: சனி பகவானை கோபப்படுத்தும் தவறுகள்.. இனி செய்யாதீங்க
பொதுவாக ஒரு வீடு கட்டும் பொழுது வாஸ்து சாஸ்த்திரங்களை முறையாக கடைபிடிக்க வேண்டும்.
நாம் வாழும் காலம் முழுவதும் உறவினர்களுடன் வாழும் இடம் சாஸ்த்திரங்களுடன் இருப்பது ஒரு விதமான நிம்மதியை கொடுக்கிறது.
ஜோதிடத்தின் படி, சனி பகவான் நீதிமானாக இருக்கிறார். இவர் பக்தர்களுக்கு கர்ம வினைகளை வழங்கும் வேலையை செய்கிறார். வீட்டில் நாம் செய்யும் சிறு தவறுகள் கூட சனி பகவானை கோபப்படுத்தலாம்.
உதாரணமாக, வீடு கட்டும் பொழுது சிலர் மேற்கு திசையில் இருக்கக் கூடாத அறைகள் அல்லது பொருட்களை வைப்பார்கள். இது போன்ற அலட்சியமான விடயங்கள் சனி பகவானை கோபப்படுத்தும்.
பணப்பிரச்சனைகள், உடல்நலக் குறைபாடுகள், குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் உள்ளிட்ட பிரச்சினைகள் சனி பகவானின் திருவிளையாடலாக பார்க்கப்படுகிறது.
அந்த வகையில், சனி பகவானை கோபம் கொள்ள வைக்கும் சாஸ்த்திர தவறுகள் என்னென்ன என்பதை பதிவில் பார்க்கலாம்.
செய்யக்கூடாத தவறுகள்
1. வாஸ்து சாஸ்த்திரங்களின்படி, வீடு கட்டும் பொழுது மேற்கு திசையில் சமையலறை வைக்கக் கூடாது எனக் கூறப்படுகிறது. மேற்கு திசையில் சமையலறை இருந்தால் உணவு போதாமை ஏற்படும். அத்துடன் வீட்டிலுள்ளவர்களுக்கு உடல்நல பிரச்சினைகள், நிதி சிக்கல்கள் அதிகரிக்கும். மாறாக சமையலறை எப்போதும் தென்கிழக்கு அக்னி மூலை இருப்பது நல்லது.
2. மேற்கு திசையில் கோயில் அல்லது பூஜை அறை அமைத்தால் அது வீட்டில் பிரச்சினையை உண்டு பண்ணும். அதே சமயம் குளியலறை, படுக்கையறை அல்லது பெரிய பால்கனி வைப்பது பிரச்சினைகளை குவிக்கும். ஏனெனின் இந்த திசையில் தண்ணீர் தொடர்பான பிரச்சினைகள் வரும் பொழுது எதிர்மறையான விளைவுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது.
3. மரச்சாமான்களை மேற்கு திசையில் வைக்கும் பொழுது அதனை எப்போதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் வைத்து கொள்ள வேண்டும். உடைந்து போன பொருட்கள், குப்பைகள் ஆகியவற்றை இந்த இடத்தில் வைத்தால் நேர்மறையான ஆற்றல்கள் குறையும்.
4. சனி பகவானின் அருளை பெற நினைப்பவர்கள் மேற்கு திசையை எப்போதும் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். குடும்பத்தில் ஒற்றுமை இருக்க வேண்டும் என்றால் இது போன்ற சாஸ்த்திரங்களை கடைப்பிடிப்பது அவசியம். சனி பகவானின் கடினமான நிலை பணம், ஆரோக்கியம் உள்ளிட்ட பிரச்சினைகளில் தாக்கம் செலுத்தும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |