படுக்கை அறையில் இந்த பொருட்கள் இருக்கா ? அப்போ நிம்மதியான உறக்கம் வராது
நிம்மதியான உறக்கம் வர வேண்டும் என்றால் வாஸ்த்து சாஸ்திரப்படி படுக்கை அறையில் எந்த பொருட்களை வைக்க கூடாது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
வாஸ்து சாஸ்திரம்
மனமும் உடலும் ஓய்வெடுக்கும் இடம் தான் படுக்கை அறை. இந்த படுக்கை அறையில் அமைதியாகவும், வெளிச்சமின்றியும் இருக்க வேண்டியது அவசியம்.
கிழக்கு திசையில் தலை வைத்து தூங்குவது மிகவும் நல்லது. கிழக்கு திசையில் உறங்கினால் நமது உடலுக்கு நேர்மறையான ஆற்றல்கள் கிடைக்கும்.
தெற்கு திசையில் தலை வைத்து உறங்கினால் , புகழ், செல்வம், வெற்றி தேடி வரும் உடல் ஆரோக்கியமும் மேம்படும். வடக்கு திசையில் தலை வைத்து உறங்கக்கூடாது.
ஒருவர் வடக்கு திசையில் தலை வைத்து தூங்கினால் உடலின் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டு உடல்நல பிரச்சனைகள் வரும்.
படுக்கை அறை சுவரில் கத்தி, சண்டையிடும் போர்வீரன், ஆடு, மாடு, மான் தலைகள், புலி, சிங்க உருவங்களின் போன்ற படங்களை வைக்கக்கூடாது.
காதலை தூண்டும் ஓவியங்கள், படங்கள் போன்றவற்றை வைப்பது நல்லது. படுக்கை அறை இளம் வண்ணங்களில் இருப்பது நல்லது. இளம் நீலம், பிங்க், இளம் மஞ்சள் போன்ற நிறத்தில் வர்ணம் பூசுவது சிறப்பு.
அதே போல படுக்கை அறையின் மேற்பகுதி (சீலிங்) வெண்மை நிறத்தில் இருப்பது நன்மை தரும். இரவு நேர விளக்கு சிவப்பு நிறத்திலோ இளம் ஊதா நிறத்தில் வைக்க வேண்டும்.
காதல் ஓவியங்கள், ரதி மன்மதன் சிலையை படுக்கை அறையில் தென்மேற்கு மூலையில் வைப்பது மனதிற்கு நிம்மதியும் உறக்கமும் தரும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |