பழைய காலெண்டரை தூக்கிப்போடாமல் வைத்திருக்கீங்களா? உடனே வெளியே போட்டிடுங்க
வாஸ்து சாஸ்திரப்படி புதுவருட காலண்டரை எந்த இடத்தில் வைக்கலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வாஸ்து சாஸ்திரம்
பொதுவாக இந்து சமய மக்கள் முக்கியமாக பார்ப்பது வாஸ்து சாஸ்திரம் ஆகும். புதிதாக ஒரு பொருள் வாங்கும் போது கூட நல்ல நாள் பார்த்தே வாங்குவார்கள்.
அதுமட்டுமின்றி வாங்கிய பொருட்களை எந்தஇடத்தில், எந்த திசையில் வைக்க வேண்டும் என அதற்கான சரியான திசையையும் தெரிவு செய்யலாம்.
வீட்டை சுத்தம் செய்யும் துடைப்பம், செருப்பு என அனைத்தும் சரியான இடத்தில் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால் தான் செல்வ செழிப்பும், மகிழ்ச்சியும் கிடைக்கும்.
இதே போன்று காலண்டர் போடவதற்கு சரியான இடத்தினை நாம் தெரிவு செய்வது மிகவும் முக்கியமாகும். அவை சரியான இடத்தில் இல்லையெனில் வீட்டில் அடுத்தடுத்து பிரச்சனை ஏற்படும் என்ற சிந்தனையும் காணப்படுகின்றது.

எந்த திசையில் மாட்டக்கூடாது?
காலண்டரை தெற்கு திரைசயில் தொங்கவிடக்கூடாது. ஏனெனில் இவை காலத்தை குறிக்கும் என்பதால் வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்தில் மோசமான விளைவு ஏற்படுத்தும்.
வாஸ்துபடி காலண்டரை கதவிற்கு பின்புறத்தில் தொங்கவிடுவதையும் தவிர்க்கவும். பிரதான கதவிற்கு அருகில் காலண்டர் வைக்கக்கூடாது. ஏனெனில் குடும்ப உறுப்பினர்களின் முன்னேற்றத்தை பாதிக்குமாம்.
அதே போன்று அதிகமாக காற்று வீசும் பகுதியில் காலண்டர் தொங்கவிடுதல் கூடாது. எந்த நேரமும் காலண்டர் பறந்தவாறு இருந்தால், வீட்டில் முன்னோற்றமும் இருக்காது.

பழைய காலண்டருடன் புதிய காலண்டரை ஒருபோதும் தொங்க விடக்கூடாது. இவை எதிர்மறை ஆற்றலை ஏற்படுத்துமாம். அதே போன்று பழைய காலண்டரை வெளியே போடாமல் வீட்டிலேயே வைத்திருந்தால், வீட்டின் பொருளாதார பிரச்சனை ஏற்படுவதுடன், எந்தவொரு முன்னேற்றமும் இருக்காது. பல தடைகளும் ஏற்படும்.
மேலும் காலண்டரில் சண்டையிடும் படம், பாழடைந்த வீடு, காய்ந்த மரம், விலங்குகள் வேட்டையாடுவது போன்றவை கட்டாயம் இருக்கக்கூடாது.
எங்கு தொங்க விடலாம்?
வாஸ்துபடி, காலண்டரை மேற்கு திசையில் தொடங்க விட வேண்டும். இவ்வாறு மேற்கு திசையில் நாம் காலண்டரை தொங்கவிடும் போது வீட்டில் உள்ள அனைவரும் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.
அதே போன்று வடக்கு திசையிலும் காலண்டரை தொங்கவிடலாம். ஏனெனில் இவை செல்வத்தின் அதிபதியான குபேர பகவான் குடியிருக்கும் திசை என்பதால் செல்வத்தின் உயர்வை கட்டாயம் ஏற்படுத்துமாம்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |