vastu tips: வீட்டில் எப்பொழுதும் மகிழ்ச்சி, அமைதி நிலைக்க வேண்டுமா?
வீட்டில் அமைதி மற்றும் மகிழ்ச்சி நிறைந்திருப்பதற்கு நாம் கடைபிடிக்க வேண்டிய வாஸ்து டிப்ஸ்களை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
வீடு என்பது வெளிப்புறம் சுத்தம், உள்ளே அமைதி இருந்தால் தான் வாழ்வும் இனிமை தான். ஆனால் சில தருணங்களில் பிரச்சனைகள், குழப்பம், நிம்மதியின்மை, சண்டை சச்சரவுகள் ஏற்படுவதையும் நாம் அவதானித்து வருகின்றோம்.
சில வாஸ்து விதிகளை நாம் கடைபிடித்தால் வீடு எப்பொழுதும் மகிழ்ச்சியாகவும், அமைதியாகவும் இருப்பதை நாம் அவதானிக்க முடியும்.
வீட்டில் மகிழ்ச்சிக்கான வாஸ்து டிப்ஸ்
வீட்டின் வாசலானது கிழக்கு அல்லது வடகிழக்கு நோக்கி இருப்பது அவசியமாகும். இவை நேர்மறை சக்தியை அதிகரிக்க செய்கின்றது. வாசலில் ஒரு தொட்டியில் துளசி, மண் விளக்கு அல்லது சிறிய கோலம் அவசியமாகும். வாசலில் இரும்பு பொருட்கள், அடர்த்தியான நிறங்கள், குப்பைகள் இருக்கக்கூடாது.
வீட்டின் தென்மேற்கு பகுதியில் பெரியவர்களின் இருக்கை இருக்க வேண்டும். இவை நம்பிக்கை மற்றும் நிலைத்தன்மை தருமாம். சோபா, டிவி இவைகள் வடக்கு அல்லது கிழக்கு நோக்கி இருக்கவும். மேலும் ஜன்னல் வெளிச்சம் கட்டாயம் இருக்க வேண்டும். மரத்தால் செய்யப்பட்ட மேஜை மற்றும் சோபா அமைப்புகள் இருந்தால் நன்றாக இருக்கும்.
தம்பதிகளின் படுக்கை தெற்கு அல்லது தென்மேற்கு பகுதியில் இருக்க வேண்டும். நிலையான அன்பு மற்றும் நெருக்கம் இருப்பதற்கு தலை தெற்கு நோக்கும், கால்கள் வடக்கு நோக்கியும் இருக்குமாறு தூங்கவும். படுக்கையறை சுவரில் சிவப்பு, கருப்பு நிறங்களை தவிக்கவும். மொபைல், லேப்டாப், அலுவலகக் கனக்ஷன் எல்லாம் படுக்கையறையில் தவிர்க்க வேண்டும்.
வீட்டில் பூஜை அறை வடகிழக்கில் இருக்கவும். தெய்வங்களின் புகைப்படங்கள் மேற்கு அல்லது தெற்கு சுவரில் இருக்க வேண்டும். பூஜை அறையில் பழைய பூஜை பொருட்கள், பூக்கள் தேங்கியிருப்பதை தவிர்க்கவும்.
வீடு முழுவதும் சுத்தமாகவும், ஒழுங்காகவும் இருக்க வேண்டும். மணமுள்ள தாவரங்கள், சின்ன மண்பாண்டங்கள், துளசி, money plant போன்றவை நல்ல சக்தியை ஏந்தும். பொருட்கள் அதிகம் சேர்ந்து இல்லாத வெற்று இடம் தான் நம்மை சந்தோஷமாக வைக்கிறது. பழைய சாமான்கள், கெட்டிப் பொருட்கள், உடைந்த பொருட்கள் இது மனதையும் உறவுகளையும் சோர்வடையச் செய்யும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |