இந்த பொருட்கள் உங்க வீட்டில் இருந்தா தூக்கி போட்டுருங்க! துரதிஷ்டம் தான்
சில பொருட்கள் உங்கள் வீட்டில் இருந்தால் வீட்டிற்கு சரியில்லை என்று பெரியோர்கள் சொல்லி கேள்வி பட்டிருப்போம்.
அதுபோல வீட்டில் தேவையில்லாத சில பொருட்கள் இருந்தால் தூக்கி எறியுங்கள். இல்லையேல் உங்கள் முன்னேற்றத்தைப் பாதிக்கும் என வாஸ்து சாஸ்த்திரம் சொல்கிறது.
வாழ்க்கையில் நிம்மதியில், வீட்டில் இவ்வளவு பிரச்சினை, எவ்வளவு கஷ்டப்பட்டு உழைத்தாலும் கஷ்டம் வந்துக்கொண்டே இருக்கிறது என நம்மில் பலர் புலம்பிக்கொண்டே இருப்போம்.
இதற்கு காரணம் நாம் வீட்டில் வைத்திருக்கும் சில எதிர்மறையான பொருட்கள் தான். இந்த 6 பொருட்களை இனி வீட்டில் வைத்திருக்க வேண்டாம்.
வீட்டில் வைக்க கூடாத பொருட்கள்
போர், சண்டை போன்ற அழிவை சித்தரிக்கும் புகைப்படங்களை வீட்டில் வைத்திருந்தால் அது துரதிஷ்டத்தை கொண்டு வரும் மேலும், வீட்டிலும் சண்டை, வாக்குவாதங்கள் ஏற்படும்.
தாஜ்மஹால் அல்லது பிரமிடுகள் போன்ற படங்களை வீட்டில் வைத்திருக்க கூடாது இவை கல்லறை மற்றும் மரணத்தை அடையாளப்படுத்துவதால் வீடுகளில் வைத்தால் உடல் நலம் மற்றும் பணத்தை இழக்க நேரிடும்.
வீடுகளின் சுவர்களுக்கு பச்சை அல்லது சிவப்பு நிறங்களில் பெயின்ட் பயன்படுத்தினால் அது நோயை வரவைக்கும் வீட்டில் சண்டைகள் ஏற்படும்.
ரோஜாவை தவிர சேதமடைந்த தாவரங்களை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டில் இருப்பவர்களின் ஆரோக்கியம் பாதிப்படையும்.
உடைந்த கடிகாரங்கள் மற்றும் நிறுத்தப்பட்ட கடிகாரங்கள் என்பவற்றை வீடுகளில் வைத்திருந்தால் வீட்டிற்கு துரதிர்ஷ்டம், துன்பம், உடல் நலப்பிரச்சினை என்பன ஏற்படுமாம்.
பழைய காலெண்டர்களை வீடுகளில் வைத்திருக்க கூடாது அவ்வாறு வைத்திருந்தால் அவற்றை உடனே தூக்கி எறிய வேண்டும் ஏனெனில் இவை வீட்டில் எந்த நல்ல காரியத்தையும் நடக்க விடாமல் பிரச்சினைகளை கொண்டு வருமாம்.
கழுகு, ஆந்தை, வௌவால், பன்றிகள் போன்ற விலங்குகளை ஓவியங்களாகவும், காட்சிப் பொருளாகவும் வீடுகளில் வைக்க கூடாது. இது குடும்பத்தில் இருப்பவர்களை பாதிக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |