கையில துளிக் கூட பணம் இல்லையா? இனி இந்த தவறுகளை திருத்துங்க... கோடிக்கணக்கில் பணம் சேரும்!
லட்சுமி தேவியின் அருள் இருந்தால் நொடியில் பணக்காரராகலாம்.
லட்சுமி தேவியின் வரத்தை பெறுவதற்கும் நல்ல நிதி நிலைமையில் வாழ்வதற்கும் ஒருசில தவறுகளைத் தவிர்க்க வேண்டியது அவசியம்.
வாஸ்து சாஸ்திரத்தின் படி, நிதி விஷயத்தில் மக்கள் செய்யும் பல தவறுகள் அவர்களின் மகிழ்ச்சியையும் செழிப்பையும் பாதிக்கும்.
ஆகவே வாஸ்து படி, பணத்தைக் கையாளும் போது ஒருவர் தவிர்க்க வேண்டிய சில தவறுகளைப் பற்றி இப்போது காண்போம்.
எச்சில் கொண்டு பணத்தை கணக்கிடக்கூடாது
வாஸ்துப்படி, பணம் லட்சிமி தேவிக்கு சமமானது. பணத்தில் எச்சிலை வைப்பது லட்சுமி தேவியை அவமதிப்பதற்கு சமம். இத்தகைய பழக்கத்தைக் கொண்டவர்கள் லட்சுமி தேவியின் கோபத்தால் வறுமையில் வாட வேண்டியிருக்கும்.
பணத்தில் எதையும் எழுதாதீர்
பணத்தில் எதையும் எழுதாதீர்கள். இது அந்த பணத்தை அவமதிக்கும் செயல் மட்டுமன்றி, இந்திய அரசின் விதிமுறைகளுக்கு எதிரானதும் கூட. இதுவரை நீங்கள் உங்களிடம் உள்ள பணத்தில் எதையாவது எழுதும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், இனிமேல் அதை தவிர்த்திடுங்கள்.
தேவையில்லாத காகிதங்களுடன் பணத்தை வைத்திருக்காதீர்
வாஸ்து சாஸ்திரத்தின் படி, தேவையில்லாத காகிதங்களுடன் பணத்தை வைத்திருப்பதன் மூலம் உங்கள் வருமானம் பாதிக்கப்படும் மற்றும் நிதி நெருக்கடிக்கு வழிவகுக்கும்.
பணத்தை எப்போதும் பாதுகாப்பாக வைத்திருங்கள்
எப்போதும் உங்கள் பணத்தை அலமாரி, செல்ப், லாக்கர் போன்றவற்றில் பாதுகாப்பாக வைத்திருங்கள். பணத்தை எப்போதும் மடித்து வைக்காதீர்கள். இது பணத்தை அவமரியாதை செய்வது போன்றதாகும்.