கற்பூரத்துடன், கிராம்பு சேர்த்து எரித்தால் பணக்கஷ்டம் தீருமா? போகிக்கு முன்னர் செய்து பாருங்க
பொதுவாக சிலர் சில வாஸ்து குறைபாடுகள் காரணமாக பணம் இல்லாமல் கஷ்டப்படுவார்கள்.
அப்படியான நிலையில் இருப்பவர்கள் சனிக்கிழமைகளில் கற்பூரத்துடன் கராம்பு சேர்த்து எரிப்பதால் என்ன நன்மை கிடைக்கும் என சாஸ்த்திரம் கூறுகிறது.
வாஸ்து சாஸ்திரப்படி, நாம் வீட்டில் மகிழ்ச்சியை கொண்டுவர பல வழிகள் இருக்கின்றன. இதை சிலர் கடைபிடிப்பார்கள் சிலர் கண்டுகொள்ள மாட்டார்கள். ஆனால் இந்த வாஸ்த்து சாஸ்திரங்களை பின்பற்றுவதால் முற்றிலும் நன்மை கிடைக்கின்றது.
அந்த வகையில் பணக்கஷ்டத்தை போக்கும் சாஸ்த்திரங்கள் என்னென்ன என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
சாஸ்த்திரங்கள்
இரவு நேரங்களில் கராம்பு மற்றும் கற்பூரத்தை கொளுத்தும் போது எண்ணங்களை சரியாக வைத்து பிராத்தணை செய்தால் பலன் நிச்சயம் கிடைக்கும்.
கற்பூரம் மற்றும் கிராம்பை எரிக்கும் போது வெள்ளிக்கிண்ணத்தில் எரிக்கவும். ஏனெனின் வீட்டில் உள்ள எதிர்மறை சக்தியை விரட்ட இது உதவியாக இருக்கும். இந்த வழிபாடு தீய சக்திகளை வீட்டில் இருந்து விலக்கி வைக்கும் என கூறப்படுகிறது.
அத்துடன் இந்த பொருட்களை பூஜை அறையில் எரித்துவிட்டு அதன் பின்னர் இதன் புகையை வீட்டில் எல்லா இடத்திலும் பரப்ப வேண்டும். இதனால் வீட்டில் எதிரான தாக்கங்கள் குறைக்கப்பட்டு பணப்பற்றாக்குறை நாளடைவில் குறையும்.
சனிக்கிழமை மாலை வீட்டில் கிராம்பு மற்றும் கற்பூரத்தை எரிப்பது குடும்ப உறுப்பினர்களுக்கு மகிழ்ச்சியையும் அன்பையும் தருகிறது. நாம் ஒரு விஷயம் ஆரம்பிக்கும் போது அதை சில தீய சக்திகள் வெற்றி பெற விடாமல் அதற்கு தடையாக இருக்கும். இதன்போது இந்த பொருட்களை வைத்து எரித்தால் இந்த தடைகள் விட்டு போகும்.
உங்கள் கஷ்டங்கள் நீங்கி, நீங்கள் பணக்காரர்களாக மாறலாம். இதனை தினமும் செய்யுங்கள் பலன் இரட்டிப்பாகவும் கிடைக்கலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |