இந்த தவறுகளை செய்தால் வீட்டில் பணத்திற்கு தீராத கஷ்டம் வரும் என்ன தவறு தெரியுமா?
வாஸ்த்து சாஸ்தரத்தின் படி வீட்டில் இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் பணத்திற்கு தீராத கஷ்டம் வரும் என வாஸ்த்து சாஸ்திரத்தின்படி கூறப்பட்டுள்ளது.
வாஸ்து சாஸ்திரம்
வீடுகளில் வாஸ்த்து சாஸ்திரம் பார்ப்பது மிகவும் முக்கியமாகும். நாம் இந்த சாஸ்திரத்தை பின்பற்றுவதால் பல பிரச்சனைகளில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது.
வீடுகளில் நாம் தெரியாமல் செய்யும் செயல்கள் கூட தவறாக மாறி அது வீட்டில் உள்ள மொத்த லட்சுமி கடாட்ஷத்தையும் எடுத்து விடுகிறது.
வீட்டின் குளியல் அறையில் வெறுமையான வாளிகளை எப்போதும் வைக்க கூடாது. வீட்டை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்வதில் மிகவும் கவனம் வேண்டும்.
தூய்மையான இடங்களில் லட்சுமி தேவி இருப்பதால் லட்சுமி தேவி இருக்கும் இடத்தில் பண கஷ்டம் வராது. வாஸ்து சாஸ்திரத்தின்படி படுக்கையில் படுத்துக்கொண்டு உணவு சாப்பிடுவது வீட்டில் இருக்கும் லட்சுமி தேவியை கோவப்படுத்தும் என்பது நம்பிக்கை.
எனவே இவ்வாறு சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். குப்பை தொட்டிகளை வீட்டுக்கு வெளியிலே அல்லது வீட்டு வாசலிலே வைக்கக்கூடாது.
அப்படி செய்தால் அது வீட்டில் பண கஷ்டத்தை அதிகப்படுத்தும் வாஸ்த்துப்படி இரவு உணவு உண்ட பின் பாத்திரங்களை கழுவி வைப்பது நல்லது. இதனால் வீட்டில் நல்ல சக்திகள் அதிகமாக்கி லட்சுமி தேவியின் அருளால் பணக்கஷ்டம் வராது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |