vastu tips: வீட்டில் செல்வம் குவியணுமா? ஒரே ஒரு ரோஜா பூ போதும்!
ரோஜா பூ அதன் நறுமணம் மற்றும் வசீகரத்திற்காக மக்களால் அதிகமாக பயன்படுத்தப்பட்டாலும் இந்து மற்றும் வாஸ்து சாஸ்திரத்திலும் ரோஜா மலர் அதிக முக்கியத்துவம் கொண்டதாக அறியப்படுகின்றது.
அப்படி வாஸ்து படி ரோஜா பூக்களை சரியாக பயன்படுத்தினால், வீட்டில் எதிர்மறை ஆற்றல் விலகி, செல்வம் செழிக்கும் என்று தொன்று தொட்டு நம்பப்படுகின்றது.
ரோஜா மலர் வாஸ்து மற்றும் ஆன்மீக மரபுகளில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. இதன் மூலம் வீட்டில் செழிப்பை அதிகரிக்க செய்வது எப்படி என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரேஜா பூ வாஸ்து பயன்கள்
செல்வத்தின் கடவுளாக திகழும் லட்சுமி தேவிக்ககு வெள்ளிக்கிழமைகளில் மாலையில் பூஜை செய்யும் போது ஒரு ரோஜாவை அர்ப்பணித்து, அவருக்கு ஆரத்தி காட்ட வேண்டும்.
பின்னர், அந்த ரோஜாவை வீட்டின் லாக்கரில் வைத்துவிட வேண்டும். இது வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியத்திலும் பொருளாதாரத்திலும் சிறந்த மாற்றத்தை கொண்டுவரும் என வாஸ்து நிபுர்கள் குறிப்பிடுகின்றனர்.
இந்த எளிய பரிகாரம் தெய்வத்தின் ஆசிகளைப் பெற்று, உங்கள் வீடு செழிப்பாக இருப்பதை உறுதி செய்கிறது. மேலும், நிதி கவலைகள் அல்லது பற்றாக்குறையையும் போக்கும் ஆற்றலை ரோஜா மலர்கள் கொண்டுள்ளதுடன், வீட்டில் உள்ள எதிர்மறை ஆற்றல்களை நீக்கி நேர்மறை ஆற்றல்களை ஈர்ப்பதற்கு பெரிதும் துணைப்புரிகின்றது.
தொடர்ந்து வீட்டில் அனுமனுக்கு 11 ரோஜாக்களை சமர்ப்பித்து பூஜை செய்வதன் மூலம் உங்கள் விருப்பங்கள் நிறைவேறும். மேலும், உங்கள் வாழ்க்கையில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் எனவும், இது நிதி ரீதியில் சிறந்த முன்னேற்றத்தை கொடுக்கும் எனவும் நம்பப்படுகின்றது.
மேலும் ஒரு வெள்ளை துணியுடன் ஐந்து சிவப்பு ரோஜாக்களை எடுத்து, ஒவ்வொரு மூலையிலும் நான்கு ரோஜாக்களையும் நடுவில் ஒன்றையும் கட்டி அதனை ஒரு பூச்செண்டாக மாற்றி, இந்த பொட்டலத்தை ஓடும் நீரில் மூழ்க விடுவதால், வீட்டிற்குள் மகிழ்ச்சி, சமநிலை மற்றும் நிதி வளர்ச்சியை அதிகரிக்கும் என வாஸ்து பரிகாரங்களில் குறிப்பிடப்படுகின்றது.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள்/ ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |