பிக்பாஸ் சீசன் 5-ல் கலந்துகொள்வதற்காக பார்ட்டி வைத்து கொண்டாடிய பிரபல நடிகர்!
விஜய் டிவி தொலைக்காட்சியில் ஆண்டு தோறும் ஒளிப்பரப்பாகும் ரியாலிட்டி ஷோ என்றால் அது பிக்பாஸ் தான்.
கடந்த நான்கு சீசன்களை விட நிலையில் இப்போது ஐந்தாவது சீசனுக்கான பணிகள் தொடங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து, கடந்த நான்கு சீசன்களை தொகுத்து வழங்கிய கமல்ஹாசனே இந்த சீசனையும் தொகுத்து வழங்குவார் என்பது உறுதியாகியுள்ள நிலையில் அக்டோபர் மாதம் இதன் படப்பிடிப்பு தொடங்க உள்ளதாக சொல்லப்படுகிறது.
அதற்குள் கமல் விக்ரம் படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு வருவார் என சொல்லப்படுகிறது. இதனிடையே, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பல நடிகர்களின் லிஸ்ட் வெளியாகி கொண்டிருக்கும் நேரத்தில், பப்பி படத்தில் ஹூரோவாக நடித்த வருண் பிக்பாஸ் செல்ல உள்ளதாக தெரிகிறது.
இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு செல்வதற்கு நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் நண்பர்களுக்கு பார்ட்டி வைத்துள்ளாராம்.